குயவனே குயவனே
குயவனே என் இயேசுவே
மண்ணான என்னை உருவாக்குமே
உம் கரத்தால் என்னை உருவாக்குமே
1. வழியிலே கிடந்த மண் என்னை
உம் கரத்தால் எடுத்தவரே
பலமுறை கெட்டுப்போன பின்பும்
என்னை உதறாமல் வைத்தவரே
எனக்கு நம்பிக்கை உண்டு உந்தன் கரத்தில்
என்னை நீர் உருவாக்குவீர்
2. மிதியிடப்பட்ட மண் என்மேல்
உம் மகத்தான சித்தம் வைத்தீர்
புடமிடப்பட்ட மண் என்மேல்
உம் பெரிதான திட்டம் வைத்தீர்
எனக்கு நம்பிக்கை உண்டு உந்தன் கரத்தில்
என்னை நீர் உருவாக்குவீர்
குயவனே குயவனே
குயவனே என் இயேசுவே
மண்ணான என்னை உருவாக்குமே
உம் கரத்தால் என்னை உருவாக்குமே
(உம் சித்தம் போல் என்னை உருவாக்குமே
உங்க விருப்பம் போல் என்னை உருவாக்குமே)
Song Description: Kuyavane - குயவனே.
Keywords: Tamil Christian Song Lyrics, Davidsam Joyson, Johnsam Joysonm, FGPC Nagercoil, Kuyavanae.