Neer Marathavar - நீர் மாறாதவர்
உம்மை துதித்திடுவேன் முழு பெலத்தோடு
உம்மை ஆராதிப்பேன் முழு மனதோடு
நீர் செய்த நன்மைகள்
ஏராளம் ஏராளம் உயர்த்தி ஆராதிப்பேன் - 2
நீர் மாறாதவர் நீர் மறவாதவர்
மகிமையானதை செய்கின்றவர்
1. உம்மை நோக்கி கூப்பிடுவேன்
எனக்கு செவியை சாய்த்திடுவீர்
விட்டு விலகாமல், விலகி போகாமல்
வாழ வைப்பவர் என் இயேசுவே
- நீர் மாறாதவர்
2. சோர்ந்து போகாமல் பாதுகாத்தீர்
ஏற்ற காலத்தில் உதவி செய்தீர்
நிர்மூலமாகாமல் நித்தமும் காத்து
கிருபையால் நடத்தினீர் என் இயேசுவே
- நீர் மாறாதவர்
3. பஞ்சத்தில் என்னை பாதுகாத்தீர்
உயிரோடு என்னை மீட்டு கொண்டீர்
கூப்பிட்ட நாளில் ஜெபத்தை கேட்டு
விடுதலை தந்தீர் என் இயேசுவே
- நீர் மாறாதவர்
Song Description: Neer Marathavar, நீர் மாறாதவர்.
Keywords: Paul Abraham, Neer Maraathavar, Neer Maarathavar.
If there are mistakes please share on WhatsApp