Kaniye Karthar Virumbum - கனியே கர்த்தர் விரும்பும்





 

கனியே கர்த்தர் விரும்பும் மதுரக்கனியே
காணவே அன்பாய் என்னை தேடி வாராரே - 2

பூத்து மலரும் பூவுமல்ல
பூவையர் விரும்பும் பூவுமல்ல
மாந்தர் விரும்பும் பூவுமல்ல
மகிமை இயேசு விரும்பும் அன்பு
- கனியே

ஜாதி விலகிடும் தோஷமல்ல அது
சாத்தானால் வரும் தோஷமல்ல
மக்களால் உண்டாகும் தோஷமல்ல
அது மகிமை விரும்பும் சந்தோஷம்
- கனியே

சாத்திரம் காட்டும் தானமல்ல அது
சத்திரம் கட்டிடும் தானமல்ல
மாந்தர்கள் செய்திடும் தானமல்ல
நம் மதிபர் விரும்பும் சமாதானம்
- கனியே

இத்தரையோர் காட்டும் இரக்கமல்ல
ஏழைக்கு இரங்கும் இரக்கமல்ல
பெருமையில் காட்டும் இரக்கமல்ல
நம் பிரியர் விரும்பும் தயவு
- கனியே

நாவலர் பழக்கும் குணமல்ல
நல்லோராய் நடக்கும் குணமல்ல
சன்மார்க்கம் என்ற குணமல்ல
சத்தியத்தில் நிற்கும் நற்குணம்
- கனியே

பூக்களில் உண்டாகும் வாசமல்ல
புது சேர்க்கையில் உண்டாகும் வாசமல்ல
பன்னீரால் உண்டாகும் வாசமல்ல
பரன் இயேசுவில் வைக்கும் விசுவாசம்
- கனியே

சாவில் விளங்கும் சாந்தமல்ல
சட்டத்தை அடக்கும் சாந்தமல்ல
சாந்த சொரூபி இயேசு நுகத்தில்
சாய்ந்து சுமக்கும் சாந்தம்
- கனியே

அமர்ந்திருப்பதடக்கமல்ல
அசகை வெருப்பதடக்கமல்ல
உலகை இச்சைக்கு ஒடி விலகி
உன்னதரை சேரும் இச்சையடக்கம்
- கனியே

ஏமாற்றம் என்ற இலைகளோடு
இயேசு தேடும் கனி இல்லை
அந்தோ சாபம் இறங்குவது
அத்திமரம் பட்டு போதாது
- கனியே



Kaniye Karthar Virumbum Mathurakkaniye
Kaanave Anbaai Ennai Thedi Varaare - 2

Pootthu Malarum Poovumalla
Poovaiyar Virumbum Poovumalla
Maanthar Virumbum Poovumalla
Magimai Yesu Virumbum Anbu
- Kaniye

Jaathi Vilagidum Thoshamalla Athu
Saththanaal Varum Thoshamalla
Makkalaal Undaagum Thoshamalla
Athu Magimai Virumbum Santhosham
- Kaniye

Saaththiram Kaattum Thaanamalla Athu
Saththiram Kattidum Thaanamalla
Maanthargal Seithidum Thaanamalla
Nam Mathibar Virumbum Samaathaanam
- Kaniye

Ittharaiyor Kaattum Irakkamalla
Ezhaikku Irangum Irakkamalla
Perumaiyil Kaattum Irakkamalla
Nam Piriyar Virumbum Thayavu
- Kaniye

Naavalar Pazhakkum Gunamalla
Nalloraai Nadakkum Gunamalla
Sanmaarkkam Entra Gunamalla
Satthiyatthil Nirkkum Narkunam
- Kaniye

Pookkalil Undaagum Vaasaamalla
Puthu Serkkaiyil Undaagum Vaasamalla
Panniraal Undaagum Vaasamalla
Paran Yesuvil Vaikkum Viruvaasam
- Kaniye

Saavil Vilangum Santhamalla
Sattatthai Adakkum Santhamalla
Saantha Sorubi Yesu Nugatthil
Saainthu Vumakkum Saantham
- Kaniye

Amarnthiruppathadakkamalla
Asagai Veruppathadakkamalla
Ulagai Ichaikku Odi Vilagi
Unnatharai Serum Ichaiyadakkam
- Kaniye

Yemaattram Entra Ilaigalodu
Yesu Thedum Kani Illai
Antho Saabam Iranguvathu
Atthimaram Pattu Pothaathu
- Kaniye



Song Description: Kaniye Karthar Virumbum, கனியே கர்த்தர் விரும்பும்.
Keywords: Tamil Christian Song Lyrics, Kaniyae Karthar Virumbum Madhura Kaniyae.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.