Yennai Nenjil - என்னை நெஞ்சில்



 

என்னை நெஞ்சில் சுமக்கும்
ஒரு தெய்வம் உண்டு,
அவர் நினைவில் எப்போதும் நான்...

சிலுவை மரத்தில்
என் பாவம் சுமந்து,
கலந்தார் என் உயிரோடு தான்...
பழுதில்லாதோர் ஆட்டுக்குட்டி,
அடிக்கப்பட்டார் எனக்காக தான்...
என்மேல் பொழிந்த
அன்பை நினைத்தால் கண்கள் குளமாகுதே...
- என்னை நெஞ்சில்

1. என் வாழ்வில் பெருந்துயரம் வந்ததால்,
"மறந்தாரோ?" என்றெண்ணினேன்...
நெருக்கத்தின் நேரத்தில்
வழுவாமல் காத்ததை நான் மறந்தேன்...
சத்துருவின் தந்திரங்கள்
நேசர் அன்பை மறைக்க முயல...
மனதில் உதித்த சிலுவைக் காட்சி
அதனை மேற்கொண்டதே...
- என்னை நெஞ்சில்

2. உலகத்தின் வழிதன்னில் நடந்தாலே
தோள் தட்டி ஊர் மெச்சுமே...
இயேசுவை போலவே உத்தமவழி நடந்தால்
பகை மிஞ்சுமே...
நெடுந்தூரமோ, குறுகியதோ,
மேடுபள்ளம் கொண்டதுவோ...
எதுவானாலும் அவரின் பின்னால்,
தொடர வாஞ்சிக்கிறேன்...

என்னை நெஞ்சில்...
ஒரு தெய்வம்.....
அவர் நினைவில் எப்போதும் நான்...
சிலுவை மரத்தில் என் பாவம் சுமந்து,
கலந்தார் என் உயிரோடு தான்...
பழுதில்லாதோர் ஆட்டுக்குட்டி,
அடிக்கப்பட்டார் எனக்காக தான்...
என்மேல் பொழிந்த அன்பை
நினைத்தால் கண்கள் குளமாகுதே...


Ennai Nenjil Sumakkum
Oru Theivam Undu
Avar Ninaivil Eppothum Naan

Siluvai Maratthil
En Paavam Sumanthu
Kalanthaar En Uyirodu Thaan
Pazhuthillaathor Aattukkutti
Adikkappattaar Enakkaaga Thaan
En Mel Pozhintha
Anbai Ninaitthaal Kangal Kulamaaguthae
- Ennai Nenjil

1. En Vaazhvil Perunthuyaram Vanthathaal
Maranthaaro Entrenninen
Nerukkatthin Neratthil
Vazhuvaamal Kaaththathai Naan Maranthen
Sathruvin Thanthirangal
Nesar Anbai Maraikka Muyala
Manathil Uthittha Siluvai Kaatchi
Athanai Merkkondathae
- Ennai Nenjil

2. Ulagatthin Vazhithannil Nadanthaalae
Thozh Thatti Oor Mechumae
Yesuvai Polavae Uththamavazhi Nadanthaal
Pagai Minjumae
Nedunthooramo, Kurugiyatho
Medupallam Kondathuvo
Ethuvanaalum Avarin Pinnaal
Thodara Vaanjikkiren

Ennai Nenjil
Oru Oru Theivam
Avar Ninaivil Eppothum Naan
Siluvai Maratthil En Paavam Sumanthu
Kalanthaar En Uyirodu Thaan
Pazhuthillaathor Aattukkutti
Adikkappattaar Enakkaaga Thaan
Enmel Pozhintha Anbai
Ninaitthaal Kangal Kuzamaaguthae


Songs Description: Tamil Christian Song Lyrics, Yennai Nenjil, என்னை நெஞ்சில்.
KeyWords: Dr. A. Pravin Asir, John Jebaraj. Ennai Nenjil.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.