Sthothiram Thuthi Pathiraa - ஸ்தோத்திரம் துதி பாத்திரா
ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்
காத்தீரே என்னைக் கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தீர் என்னையும் உமக்காக
கொடுத்தீர் உம்மையும் எனக்காக
வல்ல வான ஞான வினோதா
துதியே துதியே துதித்திடுவேன்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே
அலைந்த என்னையும் மீட்டீரே
நம்பினோரைக் காக்கும் தேவா
துதியே துதியே துதித்திடுவேன்
அம்புவி யாவும் படைத்தீரே
அம்பரா உந்தன் வாக்காலே
எம்பரா எல்லாம் ஈந்தீரே
நம்பினோர்குந்தன் தயவாலே
கண்ணின் மணிபோல் காத்தீரே
எம்மைத் துதியே துதியே துதித்திடுவேன்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரைக் கண் பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர் தானே
எந்நாளும் எங்கள் துணை நீரே
தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தேவே நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தீதணுகாதும் மறைவினிலே
தேடியுமதடி தங்கிடுவேன்
அல்லேலூயா ஸ்தோத்திரமே
துதியே துதியே துதித்திடுவேன்
அகில சிருஷ்டிகளும் துதிக்க
அடிமை துதியாதிருப்பேனோ
அல்லும் பகலும் நித்தியமாய்
அன்பே உம்மையே துதித்திடுவேன்
Sthothiram Thuthi Paatthiraa Ummai
Intrum Entrum Thuthithiduven
Kaatthire Ennai Karutthaaga
Vazhuvaamal Ennai Umakkaaga
Eduttheer Ennaiyum Umakkaaga
Koduttheer Ummaiyum Enakkaaga
Valla Vaana Gnana Vinothaa
Thuthiye Thuthiye Thuthitthiduven
Ellaa Kuraiyum Theertthirae
Thollai Yaavum Tholaittheerae
Allal Yaavum Aruttheerae
Alaintha Ennaiyum Meettirae
Nambinorai Kaakkum Theva
Thuthiye Thuthiye Thuthitthiduven
Ambuvi Yaavum Padaittheerae
Ambaraa Unthan Vaakkaalae
Embaraa Ellaam Eentheerae
Nambinorkkunthan Thayavaalae
Kannin Manipol Kaatthirae
Emmai Thuthiye Thuthiye Thuthitthiduven
Annalae Unthan Arulaalae
Adiyaarai Kan Partthirae
Mannaa Emakkum Neer Thaanae
Ennaalum Engal Thunai Neerae
Theeyon Ambugal Thaakkaathae Emmai
Thuthiye Thuthiye Thuthitthiduven
Thevae Neer Unthan Siragaalae
Thinamum Moodi Kaatthirae
Theethanugaathum Maraivinilae
Thediyumathadi Thangiduven
Alleluya Sthothiramae
Thuthiye Thuthiye Thuthitthiduven
Agila Sirushtigalum Thuthikka
Adimai Thuthiyaathiruppeno
Allum Pagalum Nitthiyamaai
Anbe Ummaiye Thuthitthiduven
Song Description: Tamil Christian Song Lyrics, Sthothiram Thuthi Pathiraa, ஸ்தோத்திரம் துதி பாத்திரா.
KeyWords: Christian Song Lyrics, TPM Songs, Thaniyel Harish.