Karththarai Paadiye - கர்த்தரைப் பாடியே
கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
கருத்துடன் துதிப்போம் இனியநாமமதை
கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்
கரையில்லை அவரன்பு கரையற்றதே!
இயேசு நல்லவர் இயேசு வல்லவர் - என்
இயேசுவைபோல் வேறு நேசரில்லையே!
1.கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல
அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே
பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும்
திடனாய் வெயிலுக்கு ஒதுங்கும் விண் நிழலுமானார்!
2.போரட்டம் சோதனை நிந்தை அவமானம்
கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க
தேவ குமாரனின் விசுவாசத்தாலே
நான் ஜீவித்து சேவிக்க திடமளித்தார்!
3.கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலே
கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த
எல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும்
வல்லவர் இயேசு நம் முன் செல்கிறார்!
4.சீயோனில் சிறப்புடன் சேர்த்திட
இயேசு சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே
முகமுகமாகவே காண்போமே
அவரை யுகயுகமாகவே வாழ்ந்திடுவோம்!
Kartharai paadiye pottiduvome
Karuthudan thuthipom iniya naamamathe
Kadalin aazham pol karunayodirakam
Karaiyillai avar anb karayattathe - 2
Yesu nallavar yesu vallavar
Yesuvepol veru nesarillaye - 2
Kodumaiyor seeral peruvellam pole
Adikkayil mothiye mathilkalin meethe
Balanum ivvezhaikum eliyorkum thidanai
Veyiluku othungum vin nizhalumanaar - 2
Porattam sodanai nindai avamaanam
Koramai vanthum kirupaiyil nilaika
Theva kumaaranin visuvaasathaale naan
Jeevithu sevika thidamalithaar - 2
Kallu mullukalulla kadina paathayile
Kalakkangal nerukkangal emakku vandhaalum
Ellaiyilla ethir emaku vandhaalum
Vallavar yesu nammun selkiraar - 2
Seeyonei sirappudan serthida yesu
Seekiram varum naal nerungi vantheeduthe
Mugamugamaagave kaanpome avarai
Yugayugamaagave vaazhnthiduvom - 2
Song Description: Tamil Christian Song Lyrics, Karththarai Paadiye, கர்த்தரைப் பாடியே.
KeyWords: Christian Song Lyrics, TPM Songs, Kartharai Paadiyae.