En Thalaiyellam Thanneer - என் தலையெல்லாம் தண்ணீர்



 

என் தலையெல்லாம் தண்ணீர் ஆகணும்
என் கண்கள் எல்லாம் கண்ணீர் ஆகணும் - 2
நான் கதறி ஜெபித்திட
கண்ணீரோடு ஜெபித்திட - 2

கழுதை கூட தன் எஜமானனை அறியும்
என் தேசத்தின் ஜனங்கள்
உம்மை மறந்தார்களே - 2
இதோ அழியும் என் ஜனங்களுக்காய்
தினம் அழுது ஜெபிக்கணுமே - 2
- என் தலையெல்லாம்

தேசம் எல்லாம் இரத்த வெள்ளம் கண்டு
என் ஜனங்கள் சிதறி சிறையானார்கள் - 2
ஐயோ! அழகான என் தேசமே
நீ அலங்கோலம் ஆனது ஏன் - 2
- என் தலையெல்லாம்

தேடிச் சென்றேன்
ஒருவனை தேசம் எங்கும்
திறப்பில் நிற்க ஒருவனை கானேன் என்றீர் - 2
இதோ அடியேன் நான் இருக்கின்றேன்
ஜெப ஆவியை ஊற்றிடுமே - 2
- என் தலையெல்லாம்


Song Description: Tamil Christian Song Lyrics, En Thalaiyellam Thanneer, என் தலையெல்லாம் தண்ணீர்.
KeyWords: Chandra Sekaran, Youthavin Sengol, Youthaavin Sengol, En Thalaiyellaam Thanneer Aaganum.

If there are mistakes please share on WhatsApp

All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2025

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.