Aanantha Geethangal Ennaalum Padi - ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி




 

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா
அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா

1. புதுமை பாலன் திரு மனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப்படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே - ஆனந்த

2. மகிமை தேவன் மகத்துவராஜன்
அடிமை ரூபம் தரித்திரலோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரன் பிறந்தாரே - ஆனந்த

3. மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே - ஆனந்த

4. அருமை இயேசுவின் திருநாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே - ஆனந்த

5. கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடுவோம் - ஆனந்த

Aanantha Geethangal Ennaalum Paadi
Aanndavar Yesuvai Vaalthiduvom
Hallejuah Jeyam Hallejuah
Hallejuah Jeyam Hallejuah

1. Puthumai Paalan Thiru Manuvelan
Varumai Kolam Eduthavatharithaar
Munnuraippadiye Munnannai Meethae
Mannuyir Meetkavae Piranthaarae - Aanantha

2. Magimai Thevan Makaththuvaraajan
Adimai Roobam Tharithiralokam
Thootharum Paada Meipparum Potra
Thuthikku Paathiran Piranthaarae - Aanantha

3. Manathin Baaram Yaavaiyum Neekki
Marana Bayamum Purampae Thalli
Maa Samaathaanam Maa Theva Anbum
Maaraa Visvaasamum Azhithaarae - Aanantha

4. Arumai Yesuvin Thirunaamam
Inimai Thangum Innalgal Neekkum
Kodumai Peyin Belan Odukkum
Valimai Vaainthidum Naamamithae - Aanantha

5. Karunnai Ponga Thiruvarul Thanga
Kirubai Pozhiya Aarpparippomae
Emmullam Yesu Pirantha Paakkiyam
Ennnniyae Paadi Konndaaduvom - Aanantha


Song Description: Tamil Christian Song Lyrics, Aanantha Geethangal Ennaalum Padi, ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி.
KeyWords: Christian Song Lyrics, Sarah Navaroji, Tamil Christmas Song lyrics, Anantha Geethangal.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.