Pareer Anunodhayam Pol - பாரீர் அருணோதயம் போல்



பாரீர் அருணோதயம் போல் - 2
உதித்து வரும் இவர் யாரோ - 2
முகம் சூரியன் போல் பிரகாசம் - 2
சத்தம் பெருவெள்ள
இரைச்சல் போல - 2

இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவும்
லீலி புஷ்பமுமாய்
பதினாயிரங்களில் சிறந்தோர் – 2

காட்டு மரங்களில் கிச்சிலி போல் - 2
எந்தன் நேசர் அதோ நிற்கிறார் - 2
நாமம் ஊற்றுண்ட பரிமளமே - 2
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - 2
 - இயேசுவே ஆத்ம நேசரே

அவர் இடது கை என் தலை கீழ் - 2
வலக்கரத்தாலே தேற்றுகிறார் - 2
அவர் நேசத்தால் சோகமானேன் - 2
என் மேல் பறந்த கோடி நேசமே - 2
 - இயேசுவே ஆத்ம நேசரே

என் பிரியமே ரூபவதி - 2
என அழைத்திடும் இன்ப சத்தம் - 2
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் - 2
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன்–2
 - இயேசுவே ஆத்ம நேசரே

என் நேசர் என்னுடையவரே -2
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் - 2
மணவாளியே வா என்பாரே - 2
நானும் செல்வேன் அந்நேரமே - 2
 - இயேசுவே ஆத்ம நேசரே

நாம் மகிழ்ந்து துதித்திடுவோம் - 2
ஆட்டுக்குட்டியின் மணநாளிலே - 2
சுத்த பிரகாச ஆடையோடே - 2
பறந்திடுவோம் நாம் மேகத்திலே - 2
 - இயேசுவே ஆத்ம நேசரே


Song Description: Tamil Christian Song Lyrics, Pareer Anunodhayam Pol, பாரீர் அருணோதயம் போல்.
KeyWords: Lizy Dhasaiah, Paarir Arunothayam Pol, Pareer Arunothayam Pol.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.