Appa - அப்பா



உம்மை விட்டுப் பிரிந்து சென்றேன்
அடைக்கலம் நான் தேடினேன்
அதில் என்னை நான் தொலைத்தேன்
என்னையே மறந்து போனேன்

உன் கிருபையின் நதியில்
நான் மூழ்கினேன்
புது வழியை நீர் திறந்து
நடத்திச் சென்றீர்

அப்பா அப்பா
மகன்(மகள்) நான்
உம் மகன் (மகள்)நான்

உம்மை வெறுத்து நான் எங்கே போவேன்
நீரே என் அடைக்கலமே
இதுவரை நானறியேன்
நானே உம் பிள்ளை என்று
உம் கண்கள் என்னை விட்டு விலகவில்லை
உம் நிழலில் தான் எந்தன் பாதுகாப்பு

அப்பா அப்பா
மகன்(மகள்) நான்
உன் மகன் (மகள்)நான்

உம் கண்ணின் மணிதானே அப்பா - நான்

தள்ளாமலும் விட்டு விலகாமலும்
அவமானத்தில் இருந்தென்னை காப்பாற்றினீர்

அணைத்துக் கொண்டீர் என்னை
முத்தம் செய்தீர்
இரட்டை கலைந்து எனக்கு
புது வஸ்திரம் தந்தீர்

அப்பா அப்பா மகன் நான்
உம் மகன் தான்
உன் கண்ணின் மணி தானே அப்பா


Song Description: Tamil Christian Song Lyrics, Appa, அப்பா.
Keywords: Lyrics By Nehemiah Kulothungan, Prince Mulla & Sam Alex Pasula, Shine Stevenson, Yeshua Media Productions, Bridge Music.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.