Urukkamaana Irakathalae - உருக்கமான இரக்கத்தாலே
உன்னை கண்டேனே
உன் அலங்கோல முகத்தைக் கண்டு
ஓடி வந்தேனே - 2
உன் இருளெல்லாம் நீக்க வந்தேனே
உன் அடிக்காயம் ஆற்ற வந்தேனே - 2
காயப்பட்ட சீயோனே
கண்ணீர் வடிக்கும் சீயோனே - 2
உன் அடிக்காயம் ஆற்ற வந்தேனே
உன் கண்ணீரை துடைக்க வந்தேனே
சீயோனே என் சீயோனே என் சீயோனே
நான் தெரிந்துகொண்ட என் சீயோனே - 2
உன் அடிக்காயம் ஆற்ற வந்தேனே
உன் கண்ணீரை துடைக்க வந்தேனே
சந்திரன் வெளிச்சம் சூரியன் வெளிச்சம்
போல மாற்றிடுவேன்
சூரியன் வெளிச்சம் ஏழு பகலைப்போல்
உனகாய் மாற்றிடுவேன் - 2
உன் இருளெல்லாம் நீக்க வந்தேனே
உன் அடிக்காயம் மாற்ற வந்தேனே - 2
- காயப்பட்ட
தாயைப்போல உன்னை நான்
தேற்ற வந்தேனே
ஒரு தகப்பனைப்போல
உன்னை நான் சுமக்க வந்தேனே - 2
என் அன்பாலே மூட வந்தேனே
என் காருண்யத்தால் உயர்த்த வந்தேனே - 2
- காயப்பட்ட
உன் துக்க முகத்தை
சந்தோஷமாய் மாற்ற வந்தேனே
உன் செத்த முகத்தின்
சாம்பலை எல்லாம் நீக்க வந்தேனே - 2
உன் சாம்பல் எல்லாம் சிங்காரமாகும்
உன் அழுகை எல்லாம் களிப்பாய் மாறிடுமே - 2
- காயப்பட்ட
Song Description: Tamil Christian Song Lyrics, Urukkamaana Irakathalae, உருக்கமான இரக்கத்தாலே.
KeyWords: Pr.Lucas Sekar, Revival songs, Urukkamana Irakkathale.