Neer Paarthaal Podhum - நீர் பார்த்தால் போதும்



நீர் பார்த்தால் போதும்
உலகம் திரும்பி பார்க்கும்
கிருபை வைத்தால் மனிதனின் தயவு கிடைக்கும்
உம்மை நோக்கி பார்த்தால்
பூரண திருப்தியாவோம்
உம் முகத்தை மறைத்தால்
எல்லாம் மாண்டு போவோம் - 2

விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பா
மாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா - 2

உம் கிருபை இல்லாம
நான் வாழ முடியாது - 2
உங்க கிருபை இல்லாம
நான் வாழ முடியாது - 2

சுயமாக வாழ என்னால் முடியாது
பெலத்தால வாழ என்னால் முடியாது - 2
இருள் சூழ்ந்த உலகம் இது
பொல்லாத உலகம் இது - 2
கிருபை இல்லாம
என்னால் வாழ முடியாது (உங்க) - 2
                     - விலகாத

பயங்கரமான குழியில் நான் கிடந்தேனே
உளையான சேற்றில் நான் கிடந்தேனே - 2

ஒரு கண்ணும் இரக்கமில்ல
தூக்கிவிட யாருமில்ல - 2
கிருபை வைத்ததால்
என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலை மேலேதான்
என்னை உயர்த்தி வைத்தீரே
                     - விலகாத

(நான்) சாகாம பிழைத்தது உங்க கிருபையே
கொடியவன் சீரல் மோதியடிக்கயில் காத்தீரே - 2
பெலவானின் வில்லை உடைத்தீர்
தள்ளாடும் என்னை நினைத்தீர் - 2
                    - உம் கிருபை


Song Description: Tamil Christian Song Lyrics, Neer Paarthaal Podhum, நீர் பார்த்தால் போதும்.
KeyWords: Pr.Lucas Sekar, Revival songs, Neer Parthaal Pothum.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.