Isaikaruvi - இசைக்கருவி



தூக்கி வீசப்பட்டேனே
தூசியில் நான் விழுந்தேனே
ஒளியின்றி இருளில் யாரும்
கேட்பாரற்று கிடந்தேனே
பயனின்றி பலராலும்
பரியாசம் செய்யப்பட்டேனே

உம் பார்வையோ என் மேலே பட்டதே
விலையில்லா எனக்கும் விலை தந்ததே
அழுக்கெல்லாம் துடைத்து என்னை தொட்டதே
பழுதெல்லாம் நீக்கி புது ஜீவன் தந்ததே

இசைக்கருவி உம் கரத்தில் தான்
இசைப்பீரே என்னைத்தான்
உம் கைகள் என்மேல் பட்டால் பரவசமே
அழகழகாய் என்னில் இசை மீட்டும்
அன்பான இசையாளன்
நீர் என்னை தொட வேண்டும்
நான் பயன்படவே....

1. சுயமாய் என்னால்
இயங்கிட முடியாதே
பயன்படுத்திட வேண்டுமே
என்னை நீர்...
உம் சித்தம் போல்
நான் இயங்கும் போது
இனிதான இசையாக மாறுவேன்

நீர் என்னை இசைக்கும்போது
மகிமை எனக்கல்ல உமக்கே
உம் கரத்தில் இருக்கும்போது
அழகாய் தெரிவேனே - 2
              - இசைக்கருவி

2. இசைக்கும்போது
விரல் ரேகைகள் படுவதைபோல்
உம் குணங்கள் எனக்குள்
வர வேண்டுமே
இதயத்திற்கு ஏற்றவன் இவன் என்று
நீர் சொல்லும் வகையில்
நான் வாழுவேன்

பக்குவமாய் பத்திரமாய்
என்னை பார்த்துக்கொள்பவர் நீரே
பாழான என்னையும்
பயன்படுத்திட வல்லவரே - 2
              - இசைக்கருவி


Song Description: Tamil Christian Song Lyrics, Isaikaruvi, இசைக்கருவி.
KeyWords: Solomon Jakkim, Isaikkaruvi, Thookki veesappattene.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.