Umakkaagave Palan - உமக்காகவே பலன்




உமக்காகவே பலன் கொடுக்க
விதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் - 2

நீ வழியின் விதையோ, கற்பாறையின் விதையோ
நீ முள்ளின் விதையோ, நல்ல நிலத்தின் விதையோ - 2 
நான் அவருக்காய் பலன் தரும் விதையே
என் இயேசுவுக்காய் பலன் தரும் விதையே - 2

1. வழியருகே விதைக்கப்பட்டோம்,
வசனத்தைக் கேள்விப்பட்டோம்
சாத்தானுக்கு செவிகொடுத்து, 
வசனத்தில் விலகிப்போனோம். - 2

நீ வழியின் விதையே, உன்னில் பலனில்லையே -4
நீ அவருக்காய் பலன் தரவில்லையே,
என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே -2

2. பாறையிலே விதைக்கப்பட்டோம்,
சந்தோசமாய் வசனத்தை ஏற்றோம்,
கொஞ்சக்காலம் நிலைத்திருந்து,
பின்னாலே பின்வாங்கிப்போனோம்- 2

நீ பாறையின் விதையே, உன்னில் பலனில்லையே -4
நீ அவருக்காய் பலன் தரவில்லையே,
என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே -2

3. முள்ளின்மேல் விதைக்கப்பட்டோம்,
வசனத்தைக் கேட்டுக்கொண்டோம் 
உலகக்கவலை ஐசுவர்யத்தின்,
மயக்கத்தால் பலனற்றுப்போனோம்.-2

நீ முள்ளின் விதையே,உன்னில் பலனில்லையே -4
நீ அவருக்காய் பலன் தரவில்லையே,
என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே -2

4. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டோம்,
வசனத்தைக்கேட்டு உணர்ந்தோம்,
இதயத்தில் காத்துகொண்டு,
பலமடங்காய் பலன் கொடுப்போம். - 2

நல்ல நிலத்தின் விதையே,
நான் பலன் தருவேனே - 4
நான் முப்பதும் அருபதும்
நூறாய் பலன் தருவேன் - 4 

உமக்காகவே பலன் கொடுக்க
விதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் - 2


Song Description: Umakkaagave Palan, உமக்காகவே பலன்.
Keywords: Brightson, Jenitha, Vithai, Nalla NIlatthin Vithai, Umakkaagavae Palan Kodukka.

Uploaded By: Brightson  Christopher.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.