Ninaiyaatha Naalil - நினையாத நாளில்
நினையாத நாளில் என்னை நினைப்பவரே
யாரும் அறியாத வழிகளில் நடத்துவீரே - 2
உம் சேவைக்காக உம் சித்தம் போல
என்னை நீர் நடத்தும் ஐயா - 2
1.காலங்கள் மாற சூழ்நிலை மாற
என்னை விட்டு விலகா அதிசயமே
காண்கின்ற தேவன் என்னோடிருக்க
எனக்கிங்கு குறைவுகள் இனி இல்லையே
அதிசயம் அதிசயமே
என் இயேசுவின் நாமத்திலே
பரவசம் பரவசமே
எந்தன் தேவனின் சமுகத்திலே
உம் சேவைக்காக உம் சித்தம் போல
என்னை நீர் நடத்தும் ஐயா - 2
2.எத்தன் என்று ஊர் சொன்னபோதும்
என்னை விட்டுக்கொடுக்காத அதிசயமே
உம் நாமம் சொல்ல உம்மை உயர்த்த
உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே
அதிசயம் அதிசயமே
என் இயேசுவின் நாமத்திலே
பரவசம் பரவசமே
எந்தன் தேவனின் சமுகத்திலே
உம் சேவைக்காக உம் சித்தம் போல
என்னை நீர் நடத்தும் ஐயா - 2
என்னை நீர் நடத்தும் ஐயா
Song Description: Tamil Christian Song Lyrics, Ninaiyaatha Naalil, நினையாத நாளில்.
Keywords: Davidsam Joyson, FGPC, Lyrics By Tipu Poolingam, Ninaiyatha Nalil.