Nallavare Vallavare - நல்லவரே வல்லவரே




நல்லவரே வல்லவரே
பாத்திரர் நீர் பரிசுத்தரே
ஆராதனை உமக்குத்தானே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

எல்லா நாமத்திற்க்கும்
மேலான நாமம் உடையவரே
ஒருவராக பெரிய காரியங்கள் செய்பவரே
எல்லா துதிகளுக்கும்
மத்தியில் வாசம் செய்பவரே
உம்மை ஆராதிக்க எங்களை
தெரிந்து கொண்டவரே
                     - நல்லவரே

என் நேசரைப்போல் அழகு
இந்த உலகில் இல்லையே
அவர் கண்கள் புறா கண்கள்
என்னை கவர்ந்து கொண்டதே
கன்னியர்கள் விரும்பிடும்
பரிமள தைலமே
ஆயிரம் பதினாயிரங்களில்
சிறந்தவர் நீரே
                     - நல்லவரே

உயிர்ப்பிக்கும் ஆவியும்
ஜீவனும் நீரே
உம்மை ஆவியோடும் உண்மையோடும்
ஆராதிப்பேனே
மகிமையும் மகத்துவமும் அறிந்தவர் நீரே
உம் பாதம் என்னை
தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேனே
                     - நல்லவரே


Song Description: Nallavare Vallavare, நல்லவரே வல்லவரே.
Keywords: Lesly Prabhu, Abba Ministries, Nallavarae Vallavarae.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.