Anbe Enrennai - அன்பே என்றென்னை




அன்பே என்றென்னை
நீர் சொந்தம் கொண்டீரே
அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே
நானல்ல நீரே என்னை தேடி வந்தீரே
நன்றியுடன் பாடுகிறேன் - 2

நான் தனிமை என்றெண்ணும்போது
தாங்கிக் கொண்டீரே
தயவால் அணைத்துக்கொண்டீரே
நான் ஆராய்ந்து கூடாத நன்மை செய்தீரே
நன்றி சொல்ல வார்த்தையில்லையே
                       - அன்பே என்றென்னை

என் தந்தையும் தாயும்
என்னில் அன்பு வைத்தனர்
அதை மிஞ்சும் அன்பை
உம்மில் கண்டேனே - 2
நான் என்ன செய்வேன்
உம் அன்பிற்கு ஈடாய் - 2
என்னை நான் தாழ்த்துகிறேன்
                       - அன்பே என்றென்னை

நான் நம்பினோர் பலர் என்னை
விட்டு சென்றனர்
என்னை விடாத அன்பை
உம்மில் கண்டேனே - 2
நான் என்ன செய்வேன்
உம் அன்பிற்கு ஈடாய் - 2
என்னை நான் தாழ்த்துகிறேன்
                       - அன்பே என்றென்னை


Song Description: Anbe Enrennai, அன்பே என்றென்னை.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Anbe Enrennai Neer.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.