என்னில் அன்பாய் இருப்பவரே என்னோடு என்றும் வசிப்பவரே - 2 உள்ளங்கையில் என்னை வரைந்து ஒவ்வொரு நொடியும் காப்பவரே என்னில் நினைவாய் என்றும் தயவாய் கிருபை பொழியும் என் இயேசுவே நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன் என்னில் அன்பாய் இருப்பவரே நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன் என்னோடு என்றும் வசிப்பவரே - 2 என்னையும் கூட ஒரு பொருட்டாக எண்ணி எனக்காக யாவையும் செய்பவரே தகுதி ஒன்றும் இல்லாத என்னை அப்பா(தகப்பன்) என்றழைக்க செய்தவரே - 2 நீரின்றி என்னாலே எதுவும் செய்திட இயலாதே - 2 கரங்களை பிடித்து ஒவ்வொரு தினமும் நீதியின் வழியில் நடத்திடுமே இன்னமும் அதிக கனிகளை கொடுத்து உம்மை போல என்னை மாற்றிடுமே - நேசிக்கின்றேன் இருந்தவரே இருப்பவரே வருபவரே என் இயேசுவே - 3 - நேசிக்கின்றேன் Song Description: Tamil Christian Song Lyrics, Ennil Anbaai Iruppavarae, என்னில் அன்பாய் இருப்பவரே. KeyWords: Godson GD, Worship Songs, Neere En Nambikkai, Ennil Anbai Iruppavare.
VIDEO