Mutrum Arindhavar - முற்றும் அறிந்தவர்



மனுஷர் பார்க்கும் விதம் வேற
நீங்க என்ன பார்க்கும் விதம் வேற

உள்ளமதின் ஆழங்களை
உற்று நோக்கிப் பார்ப்பவர்
என் மனதின் எண்ணங்களை
முற்றும் அறிந்தவர்
எனக்கெது தேவை என்று பார்த்து
பார்த்துக் கொடுப்பவர்
எத்தன் என்றும் பாராமலே
எட்டா உயரம் தந்தாரே
                                    - மனுஷர்

பாவி என்று பட்டம் கட்டி
கண்கள் எல்லாம் பார்க்கையிலே
பாசத்தோட உங்க கையோ
என்னை அழைச்சதே
பாவங்களை சொல்லி சொல்லி
கல் எறிவோர் மத்தியிலே
பாவங்களை மன்னிச்சது உங்க கருணையே
அதை எண்ணி எண்ணி துதிப்பேன்
உங்க பாதத்தண்டை கிடப்பேன்
அதை முத்தமிட்டு மகிழ்வேன்
என் கண்ணீரால நனைப்பேன் 
நீங்க என்னை கண்டதால பிழைச்சேன்
உம்...கைகள் என்னை தொட்டதால செழிச்சேன்
                       - உள்ளமதின்

பிள்ளை என்று கணக்கில் கூட
சேர்க்கப் படா என்னை
தேடி வந்து தெரிஞ்சுகிட்ட அன்பு பெரியதே
ஆடுகளை மேய்க்க கூட
தகுதி இல்லா என் கையில 
ஆளுகைய தந்த உங்க அன்பு சிறந்ததே 
அத சங்கீதமா பாட என் வாழ்நாளே போதாதே
அந்த சந்தோஷத்தை கூற
என் வார்த்தைகள் போதாதே 
உயிருள்ள வரைக்கும் உம்மை துதிப்பேன்
என் உயிரா உம்மை மட்டும் நினைப்பேன்
உயிருள்ள வரைக்கும் உங்களை துதிப்பேன்
என் உயிரா உங்களை மட்டும் நினைப்பேன்
                     - உள்ளமதின்


Song Description: Tamil Christian Song Lyrics, Mutrum Arindhavar, முற்றும் அறிந்தவர்.
KeyWords: Solomon Jakkim, Asborn Sam, Stanley Stephen, Manushan Parkkum Vitham.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.