El Shaddai - எல்ஷடாய்




வாசம் செய்பவரே
துணையாளரே - 2
உறைவிடமே புகலிடமே
மீட்டவரே ஆள்பவரே 
தகப்பன் நீர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தரே

எல் - ஷடாய் நீர்தானையா
உம்மையே ஆராதிப்பேன்
ஏலோயிம் நீர் தானையா 
உமக்கே ஆராதனை

மறவாமல் நினைப்பவரே
மார்போடு அணைப்பவரே - 2
உம் கரம் நீட்டி மீட்டெடுத்து
தோள் மேல் சுமப்பவரே - 2
                         - எல் ஷடாய் 

அன்பு கூர்ந்தவரே - என்னில்
உம் இரத்தத்தால் கழுவினீரே - 2
பாவங்களற பரிசுத்தமாக்கி 
ராஜாவாய் மாற்றினீரே
(ஆசாரியனாக்கினீரே) - 2
                         - எல் ஷடாய் 

நோய்களை சுமந்தவரே
பரிகாரியே - 2
உம் சரீரத்தால் சிலுவை சுமந்து
தழும்புகளால் குணமாக்கினீர் - 2
                         - எல் ஷடாய்


Songs Description: Tamil Christian Song Lyrics, El Shaddai, எல்ஷடாய்.
KeyWords: Henley Samuel, Neethimanin Koodarathil, Neethimanin Kudarathil, El Shaddai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.