Udaintha Paathiram - உடைந்த பாத்திரம்



உடைந்த பாத்திரம் நான் 
எதற்கும் உதவாதவன்  
உருகுலைந்த பாத்திரம் நான்
எவரும் விரும்பாதவன் 

குயவன் கையில் 
பிசையும் களிமண் போல - 2 
என் சித்தமல்ல 
உம்சித்தம் போலாக்கும் - 2

அந்த உலக இன்பம் எல்லாம் மாயையே
உங்க விருப்பப்படி என்னை மாற்றுமே
என் பெலவீன காலங்களில் 
உம் பெலத்தாலே பாதுகாக்கிறீர்

என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம்
கிருபை என்மேல் என்றும் இருக்குமே, 
என் அக்கிரமங்களை சிலுவையில் சுமந்தீர்
அபிஷேகத்தாலே  மூழ்க நனைத்திட்டீர்

உன்னத பாத்திரம் நான் 
உலகிற்கு ஒளியானவன் 
தேவ அழகின் பாத்திரம் நான் 
உம்மை விட்டு விலகாதவன்


Songs Description: Udaintha Paathiram, உடைந்த பாத்திரம்.
KeyWords: Tamil Christian Song Lyrics, Mohan Chinnasamy, Udaintha Paathiram Naan.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.