Ontrumillamale Nintra Ennai - ஒன்றுமில்லாமலே நின்ற என்னை




ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ...ஆ...
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு - 2

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2.

1. போன நாட்கள் தந்த வேதனைகள்
உம் அன்பு தான் என்று அறியவில்லையே - 2
உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் - 2.

தெய்வ அன்பு என்ன உன்னதம்.

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.

2. ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே - 2
(தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே - 2

தேவன் தானே என் அடைக்கலம்.

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ...ஆ...
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு
இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் - 2
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.


Song Description: Tamil Christian Song Lyrics, Ontrumillamale Nintra Ennai, ஒன்றுமில்லாமலே நின்ற என்னை.
Keywords: Maria Kolady, Manoj Elavumkal, Onnumillaymayil Ninnumenne, Ontrumillaamalay.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.