Enthan Anbulla Aandavar - எந்தன் அன்புள்ள ஆண்டவர்
எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனைப்
பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வமே நீர்
ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே
பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும்
நீரோ வாக்கு மாறாதவரே
உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன் - உம்மை
யல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வமே நீர்
எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே - இந்த
மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே
பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அரும்
இயேசுவே போதும் எனக்கு நீரே
Song Description: Tamil Christian Song Lyrics, Enthan Anbulla Aandavar, எந்தன் அன்புள்ள ஆண்டவர்.
KeyWords: Old Christian Song Lyrics, Sarah Navaroji, Enthan Anbulla Andavar, Endhan Anbulla.