Unnatha Devan - உன்னத தேவன்
உன்னத தேவன் உன்னுடன் இருக்க
உள்ளமே கலங்காதே
அவர் வல்லவரே என்றும் நல்லவரே
நன்மைகள் குறையாதே
அந்நாளில் தம் பாதம் அமர்ந்த
அன்னாளின் ஜெபம் கேட்டார்
அனாதையாய் தவித்த
அந்த ஆகாரின் துயர் துடைத்தார்
பாவத்தில் இருந்த உன்னை
பரிசுத்தமாக்கியவர்
தாழ்மையில் கிடந்த உன்னை
தம் தயவால் தூக்கியவர்
நோய்களை போக்கிடுவார் - இயேசு
பேய்களை விரட்டிடுவார்
கலங்காதே என் மகனே - இயேசு
கண்ணீரை துடைத்திடுவார்
சாபங்கள் போக்கிடுவார்
ஆசீர்வாதங்கள் தந்திடுவார்
இயேசுவை அண்டிக் கொண்டால் - உன்
இன்னல்கள் நீக்கிடுவார்
உலகத்தை நம்பாதே பாவ
பழிதனை சுமத்தி விடும்
செம்மையாய் தோன்றும் வழி - உன்னை
பாதாளம் கொண்டுச் செல்லும்
இயேசு உன் முன் நடந்தால்
நீ யோர்தானில் நடந்திடலாம்
விசுவாசம் உனக்கிருந்தால்
அந்த எரிகோவைத் தகர்த்திடலாம்
Song Description: Tamil Christian Song Lyrics, Unnatha Devan, உன்னத தேவன்.
KeyWords: Christian Song Lyrics, Old Tamil Christian Song Lyrics, Unnatha Thevan Unnudan.