Thaayin Karuvil - தாயின் கருவில்




தாயின் கருவில் கண்ட தேவா
என்னை அறிந்து அழைத்த தேவா- 2
உம்மை துதிக்கவே
இந்த நாவு போதாதே
உம் புகழை சொல்லவே
இந்த வாழ்வு போதாதே
                            - தாயின் கருவில்

இந்த ஜீவிதத்தில் சோதனை உண்டு
அதை தாங்கிட உம் கிருபை எனக்குண்டு - 2
அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
சொன்னதை என்றும் செய்து முடிப்பவர்
காத்து நடத்திடுவீர்
                            - தாயின் கருவில்

தூஷிக்கும் மனிதர் இங்குண்டு
அதை சகித்திட உம் வார்த்தை எனக்குண்டு - 2
நித்தம் உந்தன் பாதை நடப்பேன்
உந்தன் அன்பை பாடி துதிப்பேன்
சோர்ந்து போவதில்லை
                            - தாயின் கருவில்


Song Description: Tamil Christian Song Lyrics, Thaayin Karuvil, தாயின் கருவில்.
KeyWords: Angelin Elwin, EL Nesam Ministries.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.