Enakkaaga Yavaiyum - எனக்காக யாவையும்
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவரே என்னை அழைத்ததால்
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவரே எனக்குள் இருப்பதால்
பயமில்லை, பயமில்லை
இயேசு என்னோடு இருப்பதால்
1. என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்கு மாறிடா நல்ல கர்த்தர்
வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார்
- எனக்காக
2. யாக்கோபைப்போல் பயந்திருந்தேன்
எலியாவைப்போல் சோர்ந்து போனேன்
நல்லவராம் இயேசு நாடி வந்தார்
வெற்றி மேல் வெற்றியை எனக்கு தந்தார்
- எனக்காக
3. எதிரிகள் என்னை சூழ்ந்திட்டாலும்
நண்பர்கள் என்னை கைவிட்டாலும்
பயமில்லை, பயமில்லை
அவரே எனக்காய் யுத்தம் செய்வார்
- எனக்காக
Song Description: Tamil Christian Song Lyrics, Enakkaaga Yavaiyum, எனக்காக யாவையும்.
KeyWords: Christian Song Lyrics,.Justin Samuel S, Life and Peace Media.
KeyWords: Christian Song Lyrics,.Justin Samuel S, Life and Peace Media.
Uploaded By: Justin Samuel S.