Ummaithan Nambi - உம்மைத்தான் நம்பி


 


உம்மைத்தான் நம்பி வாழ்கிறேன்
இயேசையா
உம்மைத்தான் சார்ந்து வாழ்கிறேன்
இயேசையா - 2
உலகமோ நிலையில்லை
சார்ந்துகொள்ள இடமில்லை - 2
நித்திய கன்மலையே
அசையாத பர்வதமே
அரணான கோட்டையே
நான் நம்பும் கேடகமே
உம்மை என்றும் நம்பியுள்ளேன்
வெட்கப்பட்டு போவதில்லை
வெட்கப்பட்டு போவதில்லை நான் - 2
                           - உம்மைத்தான்

நான் போகும் பயணம் தூரம்
யார் துணை செய்திடுவாரோ
யாக்கோபின் தேவன் துணையே
என்னை வழிநடத்திடுவார் - 2
தடைகள் யாவும் நீக்கி
என்னை வழிநடத்திடுவார்
நித்திய வாழ்வைக் காண
என்னையும் சேர்த்திடுவாரே - 2
                           - உம்மைத்தான்

மாயை நிறைந்த உலகினிலே
நிஜமொன்றும் இல்லை அறிந்தேனே
எதை நான் சார்ந்து போனாலும்
கானல் நீரைப் போல் மறையுதய்யா - 2
என்றென்றும் என்னை விட்டெடுபடாத
நல்ல பங்கு நீர்தானையா
இம்மைக்கும் மறுமைக்கும் தெய்வமே
நிஜமான தேசத்தில் சேர்த்திடுவீர் - 2
                           - உம்மைத்தான்

பொல்லாப்பு நிறைந்த உலகில்
யார் என்னை காத்திட கூடும்
கர்த்தர் நகரத்தை காவாராகில்
காவலாளியும் விருதாவே - 2
கர்த்தர் என் நடுவில் இருக்கையில்
தீங்கை நான் காண்பது இல்லையே
தீயையும் தண்ணீரை கடந்து என்னை
செழிப்பான தேசத்தில் கொண்டு வைப்பீர் - 2
                           - உம்மைத்தான்


Song Description: Tamil Christian Song Lyrics, Ummaithan Nambi, உம்மைத்தான் நம்பி.
KeyWords: Pr.Lucas Sekar, Revival songs, Ella Ganathirkum Paathirar Christian Song Lyrics.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.