Thaai Ennai Maranthalum - தாய் என்னை மறந்தாலும்
Scale: G Minor - 4/4
தாய் என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
யார் என்னை வெறுத்தாலும்
நீர் என்னை வெறுப்பதில்லை
தாயினும் மேலான அன்பு
என் இயேசு அப்பா உம் அன்பு
- தாய் என்னை
1. நன்மைகள் ஒன்றும் என்னிடம் இல்லை
என்னையும் நோக்கி பார்த்தீரையா
கண்களை என்மேல் பதியச் செய்து
என் வழிகளெல்லாம் காத்தீரையா
இயேசையா இயேசையா
வழுவாமல் காத்தீரையா
- தாய் என்னை
2. இரட்சித்தீர் என்னை உம் கிருபையாலே
என் கிரியையாலே இல்லை ஐயா
சுயத்தை என்னில் மறையச் செய்து
உம் சத்தத்தை கேட்க செய்தீரையா
இயேசையா இயேசையா
உம் கிருபை தந்தீரையா
- தாய் என்னை
தாயினும் மேலான அன்பு
என் இயேசு அப்பா உம அன்பு
- தாய் என்னை
Song Description: Tamil Christian Song Lyrics, Thaai Ennai Maranthalum, தாய் என்னை மறந்தாலும்.
KeyWords: Christian Song Lyrics, Kingston Paul, Charis Blessing Ministries.
KeyWords: Christian Song Lyrics, Kingston Paul, Charis Blessing Ministries.
Uploaded By: Kingston Paul.