Vazhi Nadatthum - வழி நடத்தும்
வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே
வாழ்வில் நாயகனே
நம் தாழ்வில் தாயகனே - 2
1.பரதேசப் பிரயாணிகளே நாம்
வாழும் பாரினிலே - 2
பரமானந்தத்தோடே செல்வோம்
பரமன் நாட்டினிற்கே - இயேசு
பரன் தம் வீட்டினிற்கே
வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே
2.போகும் வழியை காட்டி நல்ல
போதனை செய்வார் - 2
ஏகும் சுத்தர் மீது கண்கள்
இருத்தி நடத்துவார்
இயேசு திருத்தி நடத்துவார்
வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே
3.காடானாலும் மேடானாலும்
கடந்து சென்றிடுவோம் - 2
பாடானாலும் பாடிச் செல்வோம்
பரவசமுடனே - இயேசு
பரன் தான் நம்முடனே!
வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே
வாழ்வில் நாயகனே
நம் தாழ்வில் தாயகனே - 2
Songs Description: Tamil Christian Song Lyrics, Vazhi Nadatthum, வழி நடத்தும்.
KeyWords: Wesley Maxwell, Worship Songs, Tamil Gospel Song, Vazhi Nadatthum Valla Devan, Vazhi Nadatthum Vala Thevan.