The way forward is not just a guide, - முன்னாக சென்று வழி காட்டும் வழி காட்டியாக மாத்திரம் அல்ல

 



கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு கர்த்தர் தம்மை வெளிப்படுத்தி காட்டும் பொழுது
    முன்னாக சென்று வழி காட்டும் வழி காட்டியாக மாத்திரம் அல்ல
நமக்கு பின்னாலே ஒரு பாதுகாப்பை
தேவன்  வைத்திருக்கிறார் என்பதை உணர செய்கின்றார்
  வேதத்தில் 
இஸ்ரவேல் 
ஜனங்கள் எகிப்தை விட்டு வனாந்திரத்தை கடக்கும் பொழுது அவர்களுக்கு வழிகாட்டும் படியாக பகலிலே மேகஸ்தம்பமாகவும்💨இரவிலே அக்கினி ஸ்தம்பமாகவும் வழிகாட்டினார்.ஏனென்றால் அவர்கள் கடக்கும் பாதை
இது வரை கண்டிராத புதிய பாதையாய் இருந்தது.பிறந்தது முதல் எகிப்தை விட்டு வெளியே வந்திராத 
அவர்களின் பாதையில் வனாந்திரம் இருந்தது.
அவர்கள் பாதையில்
சமுத்திரம்  இருந்தது,
அவர்கள் பாதையில் மலைகள் இருந்தது,
அவர்கள் பாதையில் நதிகள் இருந்தது. எனவே 
தேவனே அவர்களின் முன்னாக சென்று வழி நடத்தினார்.
 முன்னாக மாத்திரம் அல்ல
எகிப்தின் சேனை பின்னாக ஆரவாரத்துடன் வரும் பொழுது 
சத்துருவின் கைகளின் நின்று விடுவித்து பின்னாகவும் பாதுகாப்பாகவுக் நின்று, பலவித சூழ்நிலைகளிலிருந்து விடுவித்து கடக்க செய்து கரைசேர்த்தார்.
அதே போல 
நம் வாழ்விலும் முன்னாக சென்று மேய்ப்பனாக வழிநடத்துகிறவர் மாத்திரம்அல்ல. 
பின்னாக பாதுகாப்பாகவும் இருந்து வழி நடத்துவார் என்பதை நாம்
மறந்து போகக் கூடாது


Sis. Meena Juliet


Description: Tamil Devotional Message By Sis. Meena Juliet, The way forward is not just a guide, A security behind us God has - முன்னாக சென்று வழி காட்டும் வழி காட்டியாக மாத்திரம் அல்ல, நமக்கு பின்னாலே ஒரு பாதுகாப்பை தேவன்  வைத்திருக்கிறார்.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.