Neer Thantha Intha Vazvirkkai - நீர் தந்த இந்த வாழ்விற்காய்


Scale: D Minor - 4/4


 நீர் தந்த இந்த வாழ்விற்காய்
உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன்
ஏன் இந்த அன்பு என்மீது
உம்மை நன்றியுடன் துதிப்பேன்

1.எத்தனை கிருபைகள் என் மீது வைத்தீர்
   எவ்வளவாய் என்னில் பொறுமை கொண்டீர்
   நன்றிகள் சொல்லிட வார்த்தைகள் இல்லை
   உந்தனின் அன்பிற்கு அளவே இல்லை

சிரம் தாழ்த்தி பணிந்திட ஓடி வந்தேன்
கரம் எந்தன் சிரம் வைத்து ஆசீர்வதியும்

2. ஜீவனைத் தந்தீர் என்னை மீட்டுக்கொண்டீர்
   ஜீவிக்கும் நாட்கள் உமக்காகத்தானே
   வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
   வானிலும் பூவிலும் ஆசையும் நீரே

3. சூழ்நிலை எல்லாம் மாறினபோதும்
   அழைத்தவர் நீரோ மாறிடவில்லை
   இருளிலே உந்தனின் வெளிச்சம் தந்தீர்
   கருவிலே கண்டவர் அருகிலே நின்றீர்

4. ஆயிரம் நன்றிகள் நான் சொல்லிட்டாலும்
   நீர் செய்த நன்மைகள் பலகோடியாகும்
   பதில் என்ன செய்வேன் என் இயேசு நாதா
   பாதமே வீழ்ந்தேன் என் அன்பு தேவா

5. புழுதியிலிருந்து தூக்கின அன்பே
   புகழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடும் வரையில்
   மகிமையின் தேசம் எந்தனின் ஏக்கம்
   இயேசுவே நீரே எனது தாகம்


Songs Description: Neer Thantha Intha Vazvirkkai, நீர் தந்த இந்த வாழ்விற்காய்.
KeyWords: Tamil Christian Song Lyrics, Reegan Gomez,  Aarathanai Aaruthal Geethangal.


Pray For Our Nation For More.
I Will Pray