Nalaanathu - நாளானது


 

நாளானது அதை விளங்கப்பண்ணும்
எத்தன்மை என்பதை வெளிப்படுத்தும் - 2

நான் செய்வதெல்லாம்
மண் என்று நகைத்தோரை
அந்நாளில் பொன்னென்று
கேட்க செய்வீர் - 2
உமக்காக யாவையும் சகிப்பேன்
நீர் ஈந்தும் பெலன்
கொண்டு துதிப்பேன் - 2

என்னோடு வந்தவர் உண்டு
எனை விட்டுப் போனோரும் உண்டு
என்னோடு வந்தவர் உண்டு
நடுவோர் அல்ல பாய்ச்சுவோர் அல்ல - 2
விளைச்சலை உம்மாலே கண்டேன்
                               - நான் செய்வதெல்லாம்

குதிரையை நம்புவோர் உண்டு
இரதத்தை சார்ந்தவர் உண்டு
செல்வத்தை நம்புவோர் உண்டு
செல்வாக்கை சார்ந்தவர் உண்டு
பலத்தால் அல்ல
பராக்கிரமம் அல்ல - 2
ஆவியால் ஜெய்மதை அடைந்தேன்
                               - நான் செய்வதெல்லாம்

தரிசனம் தந்தவர் நீரே
ஒத்தாசை தருபவர் நீரே
தரிசனம் தந்தவர் நீரே
நான் காணும் கானான்
வெகுதூரமானாலும்
நிச்சயம் கொண்டு செல்வீரே
                               - நான் செய்வதெல்லாம்




Songs Description: Tamil Christian Song Lyrics, Nalaanathu - நாளானது.
KeyWords: John Jebaraj, Levi, Naalaanadhu, Nalaanadhu, Naalaanathu, Paul Dhinakaran.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.