Leah, not loved by her husband - கணவனால் நேசிக்கப்படாத லேயாள்
லேயாள் மூத்த மகள் வீட்டிற்கு. கூச்ச பார்வை உடையவள். வேத வல்லுநர்கள் வசீகர முகம் இல்லாதவள் என கூறுகின்றனர்.அவளை யாரும் ஒரு பொருட்டாக,எண்ணாமல் இருந்து இருக்கலாம் என நினைக்கின்றேன். தன்னுடைய மாமன் மகன் வருகின்றார்.அவரும் தன்னுடைய தங்கையை தான் நேசிக்கின்றார்.7 வருடங்கள் தன்னுடைய தங்கைக்காக தான் வேலை செய்கின்றார். ஆனால் கல்யாணத்தில் தன் தகப்பன் ராகேலுக்கு பதிலாக லேயாளை விடும்படிச் செய்தார். லேயாளின் விருப்பத்தை கூட கேட்கவில்லை. அவளுடைய இருதயம் எப்படி இருந்து இருக்கும்? . தன் தங்கையை 7 வருடங்களாக நேசித்த ஒருவரை ஏற்று கொள்ள சொல்லும் நிலை எப்படி பட்டது. இதனால் தன் சகோதரியின் வெறுப்பை கூட சம்பாதித்து இருக்கலாம். தந்தை, தாய் மறந்தாலும், அற்பமாக எண்ணப்பட்டாலும் மறக்காதவர் நம் ஆண்டவர் இல்லையா? !
அவள் கணவன் அவளுக்குரிய மதிப்பைக் கொடுக்கவில்லை.அவளை நேசிக்கவில்லை. அவள் ஏமாற்றி விட்டதாக கூட நினைத்து இருக்கலாம். மீண்டும் ஏழு வருடங்கள் வேலை செய்து ராகேலைத் திருமணம் செய்துக் கொண்டு அவளை தான் இன்னும் அதிகம் நேசித்தான். தன்னை நேசிக்காத கணவன் கிடைத்தாலோ அல்லது லேயாளைப் போன்ற வாழக்கை அமைந்தாலோ அன்பு கிடைக்காத காரணத்தாலோ உயிரை மாய்த்துக் கொள்பவர் அநேகர், சிலர் விரக்தியடைகின்றனர், சிலர் பெற்றோரிடம் வந்து விடுகின்றனர். ஆனால் லேயாள் பொறுமையாகச் சகித்தாள்.
மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்ததுமே அவன் நேசிக்கவில்லை என்று தான் நினைக்கின்றேன். ஆனால் 3 பிள்ளைங்களுக்கும் அர்த்தமுள்ள பெயர்களை வைத்தாள். நான்காவது ஒரு ஆண் பிள்ளை பிறந்தது அப்போது கணவனை அல்ல, கர்த்தரை பார்த்து துதித்தாள். "யூதா " என்று பெயரிட்டாள்.
கர்த்தரைத் துதிக்க ஆரம்பித்தபின் அவள் வாழ்க்கையில் சந்தோஷம். ஆம்! அளவு கடந்த சந்தோஷம்.
"இயேசு கிறிஸ்து" அந்த யூத குலத்தில் தான் பிறந்தார். கணவனையும் அவன் அன்பையும் எண்ணி அழுதுக் கொண்டிருந்தால் காலமெல்லாம் அழவேண்டியதுதான். ஆனால் கர்த்தரைப் பார்க்கும்போதுதான் உலகம் தர முடியாக சந்தோஷம் கிடைக்கும். பலரால் அற்பமாய் எண்ணப்பட்டால் கவலைப்படவேண்டாம். கர்த்தரைப் பற்றிக் கொண்டால் போதும் கனமடையலாம். கணவனால் நேசிக்க படாமல், கஷ்டத்தை மட்டுமே நீங்கள் அனுபவித்து கொண்டு இருக்கலாம். தன்னுடைய பிள்ளைகளின் வாழ்வு என்ன வாகுமோ? என்று கலங்கி கொண்டு இருக்கலாம். கவலை படவேண்டாம். அற்பமாக தன் தந்தையால், தன் கணவனால், தன் சகோதரியால் எண்ணப்பட்டாலும் அவள் கவலை படவில்லை. அவளை கர்த்தர் கண்டார். போராடினாள், தூதா யின் கனிகளை கூடவிட்டு கொடுத்தாள்.
எளியவனை புழுதியிலிருந்து எடுத்து உயர்த்தி வைப்பவர் கர்த்தர் மட்டுமே. எனவே தள்ளப்பட்ட கல்லானால் பரவாயில்லை அதைக் கர்த்தர் மூலைக்கல்லாக்கி விடுவார்.ராகேள் அல்ல லேயாளே பிரயாணத்தை முடித்து தன் கணவனோடு அடக்கம் பண்ணபட்டார்.
Sis. Meena Juliet
Description: Tamil Devotional Message By Sis. Meena Juliet, Leah, not loved by her husband - கணவனால் நேசிக்கப்படாத லேயாள்.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.