Karthar En Meipparai - கர்த்தர் என் மேய்ப்பராய்


 


கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றாரே
நான் தாழ்ச்சி அடைவதில்லை - ஒரு
குறைவும் நேர்வதில்லை

1. புல்லுள்ள இடங்களில் என்னை நடத்தி
அமர்ந்த தண்ணிரண்டை சேர்த்திடுவார் - 2
எனது தேவைகள் எல்லாம் அறிவார்
ஏற்ற காலத்தில் தந்திடுவார் - 2

அன்பு பொங்கிடுதே எனக்குள்ளே
கிருபை தங்கிடுதே - 2

உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவர்
நாமத்தை உயர்த்திடுவேன் - 2
கர்த்தர் செய்த நன்மைகள் எண்ணி துதிப்பேன்
என் ஜீவனுள்ள நாளெல்லாம் - 2

2. மரண இருளின் பள்ளதாக்கில் நான்
நடக்க நேர்ந்தாலும் பயமில்லையே
எனது துணையாய் நீரே வருவீர்
கலங்கிடாமல் காத்துக்கொள்வீர்

ஆத்துமா தேற்றுகிறார் என்னை என்றும்
நீதியில் நடத்துகிறார்

3. எதிரிகள் முன்பாக என்னை உயர்த்தி
பந்தியை ஆயத்தம் செய்திடுவார்
தலையில் எண்ணெயை ஊற்றுகிறார் - என்னை
அழைத்து அபிஷேகம் செய்கின்றார்

பாத்திரம் நிரம்பிடுதே எந்தன் உள்ளம்
நன்றியால் துதித்திடுதே


Song Description: Tamil Christian Song Lyrics, Karthar En Meipparai, கர்த்தர் என் மேய்ப்பராய்.
KeyWords: John Edward. Christian Song Lyrics, Yahweh Ministries.

Uploaded By: John Edward.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.