Girl, Beware of modern male ewes - பெண்ணே, நவீன ஆண் ஏவாள்களுக்கு ஜாக்கிரதை
பெண்ணே!!!
வேதத்தில் சொல்லப்படாத விடுதலை விடுதலைக்கு அடையாளமல்ல. விசுவாசிகளான பெண்கள் வேதவார்த்தைகளை மீறி நடப்பதற்கான அடையாளமாகத்தான் இருக்கின்றன. பெண்களே! . நித்திய இரட்சிப்பை நோக்கி நடைபோடுவதற்கு தகுந்தவிதத்தில் வேதத்திற்கு அடங்கி அமைதலோடு நடந்து கொள்ளுங்கள். அடங்கி நடந்து கொள்ளுங்கள் என்று படிக்கும்போதே கோவம் வரும் உண்மைதான். ஆனால் ஆதியில் ஏவாள் செய்த அதே பாவத்தை தொடர்ந்து செய்து பழி தேடிக்கொள்ளாதீர்கள்.எந்த ஒரு தேவனுக்கு பிரியம் அல்லாத காரியத்தில் ஈடுபட்டு உங்களைக் கறைபடுத்திக் கொள்ளாதீர்கள்.
பெண்கள் சபையில் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று கர்த்தர் விதித்திருக்கும் நியதிகள் சமுதாயத்தில் அவர்கள் பக்திவிருத்தியோடும், பாதுகாப்போடும் வாழத்தான் என்பது இன்றும் ஒரு சில பெண்களுக்கு புரியாமலிருக்கிறது.
கர்த்தரின் விதிகளை மீறும் விசுவாசிகளான பெண்கள் சமுதாயத்தில் ஆவிக்குரிய விருத்தியோடு வாழ முடியாததோடு, நித்திய இரட்சிப்புக்கான பாதையில் பல்வேறு இடறல்களையும் சந்திக்க நேரிடும் என்பதைத் உணர்வது அவசியம். பெண்களுக்கு நன்மை செய்கிறோம், அவர்களை மதிக்கிறோம், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடுக்கிறோம் என்று பெண் விடுதலையை நாடும் புத்திசாலிகளாக தம்மைப் பறைசாற்றிக்கொண்டு செயல்படுபவர்கள் ஆண்கள் ஆனாலும் சரி, பெண்கள் ஆனாலும் சரி.கர்த்தரின் கோபத்துக்குள்ளாகப் போவது உறுதி.குறிப்பாக சபை, சபை சார்ந்த காரியங்கள், தேவனை மகிமை படுத்தும் இடம் மட்டுமல்லாமல் எல்லா இடங்களிலும் கர்த்தர் விதித்திருக்கும் விதிமுறைகளை மீறுதல் கூடாது
முக்காடு போடாவிட்டால் என்ன,
சபையில் இடறல் ஏற்படும் அளவு உள்ள ஆடைகள் அணிந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் விடுவது.
ஒரு வாலிப பெண்ணோ அல்லது ஆணோ சபையில் காதல் வசப்படுவதையும் அறிந்து அதை ஊக்குவிப்பது.
சபை மேடையில் தலைவிரித்து அலங்கோலமாய் ஆடும் பெண் பிள்ளைகளின் நடனம் போன்றவற்றை பார்த்தும்,கண்டுக்காமல் விட்டுவிடுவது.
ஆராதனை, இசை மீட்டுதல், செய்தி, பாடல் பாடுதல் என கர்த்தரின் மகிமைக்காக செய்தாலும், அது எதிரில் உள்ள நபர்களை இடற செய்யும் காரியம் காண படுமாயின் அதை சொல்லாமல் விட்டுவிடுவது.
உண்மை அல்லாத, தெளிவற்ற ஒரு வேத சத்தியத்தை ஒரு பெண் போதித்தாலும், அவளின் வெளியரங்கமான தோற்றத்திற்காக அவளை ஊக்குவிப்பது
இன்னும் பல.
இப்படியான போன்றவற்றை செய்பவரும்,ஊக்குவிப்பவரும் கர்த்தரின் கோபத்திற்கு அடங்குவர்.
கர்த்தர் பெண்களுக்கு சமுதாயத்தில் எதைச் செய்வது தகும், தகாது என்று விதித்திருப்பதை விளக்குகிறது. அதை மீறுவது ஆபத் தானதும், நெருப்போடு விளையாடும் செயலுமாகும்.
குறிப்பாக வாலிப பிள்ளைகள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். நீ எப்படி வேண்ணாலும் வாழ்ந்து கொண்டு என்னை மகிமைப்படுத்து என கர்த்தர் கூறவில்லை. என்ன, எப்படி, எங்கு செய்யவேண்டும், எப்படி வாழவேண்டும். எதை சாப்பிடவேண்டும் என்பது முதற்கொண்டு தேவன் வேதத்தில் எழுதிவைத்துள்ளார்.
மிகவும் கவனம் தேவை.
சபை, சபை சார்ந்த விஷயங்கள், சபை நபர்கள், அண்ணாகள், போதகர்கள்,போதகர் பிள்ளைகள் என யாராக இருந்தாலும் எந்த இடமாக இருந்தாலும், அது கர்த்தரின் மகிமைக்காகவே இருந்தாலும்
எந்த இடத்திலும்
""நீங்கள் ஒரு பெண் ""
என்பதை மறந்து விட கூடாது. பெண்ணே உனக்கான
சில ஆலோசனைகள்:
சபை நபர்கலானாலும் சரி, விசுவாசிகள் அல்லதொர் ஆனாலும் சரி இடை வெளி, நேரம் கடைபிடித்தல், தூரம் கடைபிடித்தல் என்பது முக்கியம்.
தனி நபர் சந்திப்பு, பொது வெளி அல்லாத இடங்கள், தனி பிரயாணங்கள்( ஊழியமாகவேஇருப்பினும் ), பாடல் பாடுவது, வீடியோ பதிவு செய்ய என்னவாக இருப்பினும் தனியாக செல்ல வேண்டாம்.
தனி நபர் பேசுகையிலும் சரி, மெஸேஜ்களிலும் சரி ஆரோக்கியமான பேச்சுகள் அல்லாது உடை, உடல், தோற்றம்,தனி பட்ட கேள்விகள் என்பது போன்று இருக்குமாயின் அந்த நபரிடமிருந்து விலகி இருப்பது மற்றும் மெஸேஜ் போன்றவற்றிற்கு பதில் தராமல் விடுவது நல்லது. பிளாக் செய்தாலும் தவறில்லை.
எப்பேர்ப்பட்ட மேல் நிலையில் உள்ளவரானாலும் வேறு யாரானாலும் சரி உங்களிடம் தனிப்பட்ட முறையில் நாகரிகமற்ற முறையில் நடந்தாலோ, பேசினாலோ உங்களின் பெற்றோரிடன் முதலில் சொல்லி விடுவது நல்லது.
எந்த ஒரு நபரிடமும் உடனே உங்கள் பெயர், விலாசம், தொலைபேசி எண் போன்றவற்றை கொடுக்க வேண்டியது இல்லை. தவிர்க்க முடியாத சூழலில் தந்தை,தாய், சகோதரர்கள் எண்கள் போதுமானது.
சபை தவிர்ந்த பொது இடங்களில் ஜெபம் பண்ணுகிறபோது, அதாவது வீட்டில் கணவனுக்கு முன் ஜெபம் பண்ணுகிறபோதோ, பேசுகிறபோதோ பெண் தனக்குத் தலைவனாக இருக்கிற கணவனுடைய அதிகாரத்துக்கு பங்கம் வராத முறையில் தன்னுடைய நிலையை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.திருமணம் ஆகாதாவர்களுக்கும் இது பொருந்தும்.
முக புத்தகமானாலும் சரி, நபர்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கும் புகைப்படங்கள் நாகரிகமாக இருந்தால் மிகவும் பாதுகாப்பானது. முடிந்தவரை முகபுத்தகத்திற்கு முகம் போதுமானது.
ஒரு விஷயம்,கிடைக்கும் பரிசு பொருட்கள், உறவுகள் போன்ற எதுவாக இருப்பினும் அதை பெற்றோரிடம் மறைக்கும் எண்ணம் ஏற்படுமாயின் எங்கோ நாம் தவறு செய்கிறோம் என நினைவில் வையுங்கள்.
உங்களின் வெளிப்புற அழகை காண்பித்து தங்களின் சரீர இச்சைக்கிற்காக எந்த ஒரு ஆணையும் அடக்கியாளும் குணத்திற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்ளுங்கள்.
சமூக வலைத்தளங்களில் தேவையற்ற காரியங்களை தேடுவதோ, தெரிந்து கொள்ள நினைப்பதோ அவசியம் அல்லாதது.
உங்களை வேத கட்டளைகளுக்கு எதிராக செயல் பட வைக்கும், துணிகரமாக விலக்கின கனியை உண்ணும் ஆண் ஏவாள்களுக்கு இனம் கண்டு ஜாக்கிரதையாக இருங்கள்.
Sis. Meena Juliet
Description: Tamil Devotional Message By Sis. Meena Juliet, Girl, Beware of modern male ewes - பெண்ணே, நவீன ஆண் எவாள்களுக்கு ஜாக்கிரதை.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.