Five Religious Worships of the Samaritan Woman - சமாரிய ஸ்திரீயின் ஐந்து மத வழிபாடுகள்

 



யோவான் 4:4-26
அநேகர் செய்தியிலும், நபர்கள் வாயிலாகவும் கூறி கேள்வி பட்டுள்ளேன். அவளை பாலியல் ஒழுக்கக்கேடானவள்  என்றும்.சமாரியா பெண் ஐந்து கணவன் உடையவள் என்று.
ஆனால் உண்மை அதுவல்ல.   சிலருக்கு இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள கடினம். O
வெறுமனே கேட்டதிலும், வாசிப்பதிலும் மேலோட்டமாக செல்லாமல், பரிசுத்த ஆவியானவரின் துணியோடு  கொஞ்சம் ஆவிக்குரிய விதத்தில் காண வேண்டும்.  
தாகத்துக்கு தண்ணீர் கேட்ட பெண்ணிடம் உனக்கு ஐந்து கணவன் உண்டு. 
நீ ஐந்து கணவன் உடையவள்
 தானே என்று இயேசு கூறுவாரா? தவறான வழியில் கையும் களவுமாக பிடிபட்டவளையே மகளே என்று அழைத்தார் உண்மைதானே. 
இயேசு கிறிஸ்துவின் ஒரு ஒரு வார்த்தையும் ஆவிக்குரிய வீதத்தில் மட்டுமே இருக்கும். வேதத்தை வாசிப்பதில் கவனம் தேவை.
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குப் பயணித்தபோது, அவர் ஒரு அசாதாரணமான வழியில்  செல்கிறார் . அவர் சமாரியா வழியாக சென்றார். சமாரியர்களும் யூதர்களும் நட்பாக  
இல்லை, பெரும்பாலான யூதர்கள்  இயேசு சென்ற அந்த வழியைத் தவிர்க்க முயன்றனர். அதற்கு பதிலாக, நம்முடைய இயேசு கிறிஸ்து  சமாரியா வழியாகச் சென்று, யாக்கோபின் கிணறு என்று அழைக்கப்படும் இடத்தில் ஓய்வெடுத்தார், அங்கு ஒரு சமாரியப் பெண்ணைக் கண்டு தாகத்துக்கு  குடிக்கக் கேட்கிறார்.
. சமாரியப் பெண்மணி அவருடைய வேண்டுகோளைக் கண்டு ஆச்சரியப்படுகிறாள் , ஏனென்றால் யூதர்கள் சமாரியர்களுடன் பொதுவாக எதையும் பயன்படுத்துவதில்லை.அடுத்து ஜீவத்தண்ணீரை குறித்து பேசுகிறார்.  இயேசு கிறிஸ்து அவள் கணவனை அழைத்து வர சொல்கிறார். 
அந்தப் பெண், “எனக்கு ஒரு கணவன் இல்லை” என்று பதிலளிகிறாள்.  இயேசு, “எனக்கு ஒரு கணவன் இல்லை என்று சொல்வதில்  சரிதான் என்கிறார். அடுத்து ஐந்து புருஷர் இருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவனும் புருஷன் அல்ல என்று கூறுவார். 
அவளுடைய அடுத்த  பதில் முதலில், அவள் சொல்கிறாள், “ஐயா, நீங்கள் ஒரு தீர்க்கதரிசி என்பதை என்னால் காண முடிகிறது".என்கிறாள். 
அறிவுபூர்வமாக அவளுடைய  கடந்த காலத்தைப் பற்றி இயேசு எப்படி அறிவார்?  இயேசு கிறிஸ்து அனைத்தையும் அறிவார். 
ஆனால் இங்கு அடுத்த அவளின் பதில், அவள் மிகவும் வித்தியாசமான ஒன்றைச் சொல்கிறாள்: 
“… நம் முன்னோர்கள் இந்த மலையில் வழிபட்டார்கள்; ஆனால் நீங்கள் வணங்குவதற்கான இடம் எருசலேமில் இருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள்"என்று கூறுகிறாள். 
இயேசு கிருஸ்து கூறியது அவளின் கடந்த கால திருமண வாழ்க்கையை பற்றி, ஆனால் 
சமாரிய பெண் திடீரென்று திருமணத்திலிருந்து உண்மையான வழிபாட்டின் தன்மைக்கு ஏன்  மாற்றுகிறாள்.? இந்த உரையாடல் ஏன் இந்த விசித்திரமான திருப்பங்களையும்  ஏற்படுத்தியது? 
கொஞ்சம் ஆவிக்குரிய விதத்தில் காண்போம்.  இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளோ, உவமைகளோ செயல்களோ சாதாரணமாக  வெறுமனே இருக்காது.
 அதற்கு ஆவிக்குரிய அர்த்தங்கள் உண்டு. நாமும் ஆவிக்குரிய விதத்தில் காணவேண்டும்.   
இது  ஒரு சாத்தியமான பதிலை வெளிப்படுத்துகிறது.
சமாரியா ஒரு காலத்தில் வடக்கு இராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது, அது தாவீது  ராஜ்யத்திலிருந்து பிரிந்தது. அசீரியா படையெடுத்து அதன் பெரும்பாலான மக்களை நாடுகடத்தும் வரை அது தனது சொந்த முடியாட்சியையும் வழிபாட்டு முறையையும் அமைத்திருந்தது. அசீரியாவின் ராஜா சமாரியாவிற்கு புறமதத்தினரை அங்கே குடியேற அழைத்து வந்தான் (1 இராஜாக்கள் 17:24).
அங்கு ஐந்து குழுக்கள் குடியேறின, ஒவ்வொன்றும் தங்கள் புறமத கடவுள்களை வணங்குகின்றன: பாபிலோனியர்கள் மர்துக்கை வணங்கினர்; குத்தின் ஆண்கள் நெர்கலை வணங்கினர்; அவ்வாவின் ஆண்கள் நிபாஸ் மற்றும் டார்டக்கை வணங்கினர்; செபார்வைம் ஆண்கள் தங்கள் நகர கடவுள்களை வணங்கினர்; மன்னர் ஹதாத் அனாத்தை வணங்கினார்.
இஸ்ரவேலர் ஒரு உண்மையான கடவுளுடன் உடன்படிக்கையில் இணைந்திருந்தாலும், அவர்கள் இந்த வெளிநாட்டினருடன் திருமணமாகி, தங்கள் வழிபாட்டையும் நடைமுறைகளையும் ஏற்றுக்கொண்டார்கள். இதனால்தான் யூதர்களுக்கு சமாரியர்களுடன் பொதுவான கலப்பு  எதுவும் இருக்காது - ஏனென்றால் இந்த புறமதத்தினருடனான அவர்களின் இணைப்பு  அவர்களைத் தீட்டுப்படுத்தியது. கிணற்றில் இருந்த  சமாரிய பெண்ணைப் போலவே சமாரியாவும் ஐந்து கணவர்களைக் கொண்டிருந்தார்கள் ,  அதாவது ஐந்து வழிபாடுகள். 
அவளுடைய உண்மையான கணவனிடமிருந்து பிரிந்தாள்.
இதில்  உண்மை என்ன  என்றால், “ஐந்து கணவர்கள்” பற்றிப் பேசுவதிலிருந்து, "ஐந்து மத வழிப்பாடை"  குறிக்கிறது. அதிலிருந்து   “உண்மையான வழிபாடு” என்பதற்கான மாற்றம் இயல்பாகவே வெளி ப்படுகிறது.  
மேலும் கிறிஸ்துவாகிய  தன்னை வெளிப்படுத்திகிறார்.


Sis. Meena Juliet


Description: Tamil Devotional Message By Sis. Meena Juliet, Five Religious Worships of the Samaritan Woman - சமாரிய ஸ்திரீயின் ஐந்து மத வழிபாடுகள்.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.