Engal Naduvile - எங்கள் நடுவிலே
எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே
உம்மை நாங்கள் வரவேற்கின்றோம்
எங்களோடு வாசம் செய்திட
எங்கள் இதயத்தை தருகிறோம்
எங்களோடு தங்கிடும்
எங்களோடு வாசம் செய்யும்
அல்லேலூயா - 3 ஓசன்னா
1. சேரக்கூடாத ஒளியில் என்றுமே
வாசம் செய்திடும் தூயவரே
சிங்காசனம் அமைக்கிறோம்
வந்து அமர்ந்திட அழைக்கிறோம்
2. முழங்கால்கள் யாவும் முடங்கிடும்
தூய நாமத்தை உடையவரே
உம்மை நாங்கள் பணிகிறோம்
பலிபீடம் அமைக்கிறோம்
3. நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
பரலோகத்தில் வசிப்பவரே
உந்தன் ராஜியம் அமைத்திட
உம்மை வருந்தி அழைக்கிறோம்
Song Description: Tamil Christian Song Lyrics, Engal Naduvile, எங்கள் நடுவிலே.
KeyWords: John Edward. Christian Song Lyrics, Yahweh Ministries.
Uploaded By: John Edward.