Be Eve who does not disobey God's command - தேவ கட்டளையை மீறாத ஏவாளாய் இரு
எந்த இடமாக இருந்தாலும், அது கர்த்தரின் மகிமைக்காகவே இருந்தாலும்
எந்த இடத்திலும்
""நீங்கள் ஒரு பெண் ""
என்பதை மறந்து விட கூடாது. பெண்ணே உனக்கான
சில ஆலோசனைகள்:
💙 சபை நபர்கலானாலும் சரி, விசுவாசிகள் அல்லதொர் ஆனாலும் சரி இடை வெளி, நேரம் கடைபிடித்தல், தூரம் கடைபிடித்தல் என்பது முக்கியம்.
💙தனி நபர் சந்திப்பு, பொது வெளி அல்லாத இடங்கள், தனி பிரயாணங்கள்( ஊழியமாகவேஇருப்பினும் ), பாடல் பாடுவது, வீடியோ பதிவு செய்ய என்னவாக இருப்பினும் தனியாக செல்ல வேண்டாம்.
💙 தனி நபர் பேசுகையிலும் சரி
, மெஸேஜ்களிலும் சரி ஆரோக்கியமான பேச்சுகள் அல்லாது உடை, உடல், தோற்றம்,தனி பட்ட கேள்விகள் என்பது போன்று இருக்குமாயின் அந்த நபரிடமிருந்து விலகி இருப்பது மற்றும் மெஸேஜ் போன்றவற்றிற்கு பதில் தராமல் விடுவது நல்லது. பிளாக் செய்தாலும் தவறில்லை.
💙எப்பேர்ப்பட்ட மேல் நிலையில் உள்ளவரானாலும் வேறு யாரானாலும் சரி உங்களிடம் தனிப்பட்ட முறையில் நாகரிகமற்ற முறையில் நடந்தாலோ, பேசினாலோ உங்களின் பெற்றோரிடன் முதலில் சொல்லி விடுவது நல்லது.
💙எந்த ஒரு நபரிடமும் உடனே உங்கள் பெயர், விலாசம், தொலைபேசி எண் போன்றவற்றை கொடுக்க வேண்டியது இல்லை. தவிர்க்க முடியாத சூழலில் தந்தை,தாய், சகோதரர்கள் எண்கள் போதுமானது.
💙சபை தவிர்ந்த பொது இடங்களில் ஜெபம் பண்ணுகிறபோது, அதாவது வீட்டில் கணவனுக்கு முன் ஜெபம் பண்ணுகிறபோதோ, பேசுகிறபோதோ பெண் தனக்குத் தலைவனாக இருக்கிற கணவனுடைய அதிகாரத்துக்கு பங்கம் வராத முறையில் தன்னுடைய நிலையை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.திருமணம் ஆகாதாவர்களுக்கும் இது பொருந்தும்.
💙 முக புத்தகமானாலும் சரி, நபர்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கும் புகைப்படங்கள் நாகரிகமாக இருந்தால் மிகவும் பாதுகாப்பானது. முடிந்தவரை முகபுத்தகத்திற்கு முகம் போதுமானது.
💙ஒரு விஷயம்,கிடைக்கும் பரிசு பொருட்கள், உறவுகள் போன்ற எதுவாக இருப்பினும் அதை பெற்றோரிடம் மறைக்கும் எண்ணம் ஏற்படுமாயின் எங்கோ நாம் தவறு செய்கிறோம் என நினைவில் வையுங்கள்.
💙 உங்களின் வெளிப்புற அழகை காண்பித்து தங்களின் சரீர இச்சைக்கிற்காக எந்த ஒரு ஆணையும் அடக்கியாளும் குணத்திற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்ளுங்கள்.
💙சமூக வலைத்தளங்களில் தேவையற்ற காரியங்களை தேடுவதோ, தெரிந்து கொள்ள நினைப்பதோ அவசியம் அல்லாதது.
💙 ஒரு பெண் இந்த இந்த விதமான விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என வேதம் சொல்லுகிறது. ஆனால் உங்களை வேத கட்டளைகளுக்கு எதிராக செயல் பட வைக்கும், துணிகரமாக விலக்கின கனியை உண்ணும் ஆண் ஏவாள்களுக்கு இனம் கண்டு ஜாக்கிரதையாக இருங்கள்.
Sis. Meena Juliet
Description: Tamil Devotional Message By Sis. Meena Juliet, Be Eve who does not disobey God's command - தேவ கட்டளையை மீறாத ஏவாளாய் இரு.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.