Awareness for girl children - பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு
தயவு செய்து பெற்றோரே, உங்கள் பெண் பிள்ளைகளை எக்காரணம் கொண்டோ, எதற்காகவும் யாரையும் நம்பி எங்கும் அனுப்ப வேண்டாம்.ஆவிக்குரிய அண்ணனோ ஆவி அல்லாத அண்ணனோ, இசை வகுப்போ, சுற்றுளாவோ அது உறவினர் வீடு முதல் சபை வரை. உதவியாயினும்,முக்கியமான காரியங்கள் ஆயினும் தனியாக அனுப்புவதை தவிர்க்கவும்.
தற்போதைய சூழ்நிலையில், அம்மாக்களாகிய நாம் குழந்தையைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் கணவர், மாமியார், நண்பர்கள் மற்றும் சமூகம் உங்களை ஒரு வெறி பிடித்தவர் என்று கூட அழைக்கட்டும், ஆனால் உங்கள் குழந்தையின் பாதுகாப்பை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.
உங்களையும் உங்கள் கணவனையும் தவிர உங்கள் குழந்தையின் பாதுகாப்பைப் பற்றி யாரையும் நம்ப வேண்டாம். உங்களை தவிற வேறு யாரும் அரவணைத்து, உங்கள் குழந்தையுடன் மிகுந்த பாசத்தைக் காட்ட வேண்டாம். எந்தவொரு காரணத்தையும் கூறி, உங்கள் குழந்தையை அவர்களிடமிருந்து விலக்குங்கள். ஒரு நபர் மீது உங்களுக்கு முழு நம்பிக்கை இருந்தாலும் கூட, உங்கள் குழந்தையை ஒரு நடைக்காக , உணவு வாங்குவதற்காக, வெளியில் கடைக்கோ, சுற்றி பார்ப்பதற்காகவோ யாருடனும் வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம்.
உங்கள் குழந்தையை கவனிக்கவும்; அவர் எந்த குறிப்பிட்ட நபருடனும் செல்ல விரும்பவில்லை என்றால் அவரை கட்டாயப்படுத்த வேண்டாம்! உங்கள் பிள்ளை ஏதாவது சொல்கிறாரா என்று கேளுங்கள், நம்புங்கள்.
சபை, சபை அடுத்த காரியங் களில் கூட யாருடனும் தனியாக அனுப்ப வேண்டாம். வீட்டு ஜெபம், இசை வகுப்பு, தொலை தூர ஊழியம் என எதுவாக இருந்தாலும் குழுவாக இருப்பின் அனுமதிக்கவும். தனியாகவோ, தனிப்பட்ட நபருடன் செல்வதை தவிர்க்கவும். சபை போதகர் முதற்கொண்டு மூத்த சபை சகோதரர்கள் என யாராக இருந்தாலும் ஒன்றே!தவிர்க்கவும்.
குழந்தைகளின் ரோல் மாடல் பெற்றோர்கள் தான். அதனால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலை யும் உங்கள் குழந்தை கவனித்துவருகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.
குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே , அதை கவனிக்கத் தொடங்குங்கள் . கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம் . நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள் . மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும் ; அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி !
வாலிப பெண்களே
🔥எல்லா தாவீதும் யோசேப்பை போல பத்சேபாளை பார்ப்பதில்லை!
🌻நம்பிக்கை வைக்க வேண்டிய இடத்தில் நம்பாததும் நல்லதே சில நேரங்களிலில் !!!!!
🌻நீங்கள் ஆன்லைனில் சந்தித்தவர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிரும்போது கவனமாக இருங்கள் ..
🌻 பின்னர் உங்கள் வாழ்க்கையை திசைதிருப்பக்கூடும் ..
இப்போது பல சம்பவங்களைக் கேட்ட பிறகு-ஒரு நாட்களில் எனது பரிந்துரை,
சீக்கிரமாக எந்த ஒரு நபர்களுக்கு ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம்
பதிலளித்தாலும்
தயவு செய்து தனியுரிமை வரியைப் பராமரிக்கவும் உங்களுக்குள் பகிரப்படும் ஒரு புகைப்படங்கள், தகவல்கள் ல் தயவு கவனமாக இருங்கள்.
⚠️நீங்கள் சமூக ஊடகங்களில் எதை வெளியிடுகிறீர்கள்,
⚠️ஆன்லைனில் யாருடன் பேசுகிறீர்கள் என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
⚠️🚫நீங்கள் ஆன்லைனில் சந்திக்கும் ஒருவரை நம்ப முடியாது.
🚷 மக்கள் எப்போதும்
✳️ அவர்கள் யார் என்று உண்மையாக சொல்வதில்லை.
✳️எந்த ஒரு கண்ணியமுள்ள ஆணும் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு உரையாடலை தவிர்ப்பார்கள். அப்படி ஏற்படுமாயின் தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் எந்த ஒரு தாயயையோ சகோதரிகளையோ மதிக்கும் ஆணும் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட மாட்டார்கள்.
✴️ஒரு வேலை உங்களால் பகிரப்பட்ட படங்கள், கடந்தகால வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்து பின் எதிர் காலத்தில் அதை வைத்து பிசாசு அந்த நபரை கொண்டு உங்கள் தலைமேல் உட்கார்ந்து உங்களை ஆட்டுவிக்க ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.
எப்பேர்ப்பட்ட பரிசுத்தவான்களாக இருக்கும் தாவீது ஆனாலும் சரி யோசேப்பு ஆனாலும் சரி குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பதில் தரவோ அல்லது உரையாடவோ அவசியம் கிடையாது.
Sis. Meena Juliet
Description: Tamil Devotional Message By Sis. Meena Juliet, Awareness for girl children - பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.