A Book of David's Sins! - தாவீதின் பாவங்களின் புத்தகம்!
ஒரு போதகர் தாவீதை குறித்தும், அவர் செய்த பாவங்களை குறித்தும் அதிகமாக பேசி வந்துள்ளார். ஒரு நாள் இவருக்கும் மற்றொரு போதகருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அந்த கருத்து வேறுபாட்டின் உச்சமாக, ஒரு புத்தகமாகவே தாவீதின் பாவங்கள் என்ற தலைப்பை கொண்டு எழுதி விட வேண்டும் என்ற தவிர்க்க முடியாத எண்ணம் உருவெடுக்க, ஒரு புத்தகம் எழுதி வெளியிடவும் செய்தார்.
அந்த புத்தகம், அவர் எதிர் பார்த்ததைவிட விற்பனை ஆனது.ஒரு சில எதிர்ப்புகள் இருந்தாலும், வரவேற்பு அதிகமானதால், ஒரு வித பெருமையும் ஏற்பட, தான் எழுதியது சரி எனவும் அழிக்க முடியாத ஒரு எண்ணம் ஆழ்மனதில் உட்கார்ந்து கொண்டது. அந்த புத்தகத்தில்,
தாவீது செய்த பாவங்கள், அவரின் தவறான குணங்கள் என தன் மனதில் பல வருடங்களாக இருந்த பெரும் வெறுப்புகள் இருந்தது தெரிந்தது, மேலும் உச்ச கட்டமாக "என்னை மட்டும் கேட்டால் நான் தாவீதுக்கு மன்னிப்பே கொடுத்து இருக்க மாட்டேன்" எனவும் ஒரு வரி இடம் பெற்றிருந்தது.
காலங்கள் உருண்டு ஓடியது. உடல் நல குறைவின் கரணமாக ஓய்வுஎடுக்க வேண்டிய சூழ்நிலை.
சக ஊழியர் அவரை சந்திக்க வந்தார். அவர் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மிகவும் சுகவீனமாய்,
படுத்த படுக்கையில், பேச முடியாத சூழ்நிலையில் அவர் அந்த ஊழியரிடம்
" நான் பெரும் தவறு செய்து விட்டேன், அந்த புத்தகத்தில் நான் என்னவெல்லாம் தாவீதின் பாவங்கள் என்று எழுதினேனோ, அத்துணை பாவங்களையும் ஒன்று விடாமல் நான் செய்து விட்டேன். அருவருப்பான வாழ் வாக மாறி போனது என் வாழ்வு, தயவு செய்து எனக்காக ஜெபம் செய்யுங்கள் என்று கதறி அழுதாராம்.
கடவுள் பிள்ளைகள் துணிகரமாக பேச பயப்பட வேண்டும். உணர்த்த வேண்டும் ஆனால் அதற்கும் ஒரு முறை உள்ளது அதை தாண்ட கூடாது.சொல்ல போனால் வேதத்தில் "பிரதான தூதன் பிசாசை கூட துணிகரமாய் தூஷிக்க துணியாமல் "என்று உள்ளது.அவர்கள் பேசுகின்ற சத்தியத்தில் தவறா கூறலாம்.தவறில்லை. ஆனால் நமக்கு அவர் மீது கொண்ட பொறாமையாய், கோபத்தை இதன் மூலமாக பேசி அவர்களை அசிங்க படுத்த முயன்றால் வேதத்தில் மிரியாமை நினைத்து கொள்ளுங்கள்.அபிஷேகம் பெற்ற ஊழியரையோ, விசுவாசிகளையோ பேச துணிய கூடாது.100% நம்முடைய வார்த்தைகள் கண்டிப்பாக ஒருவரை மாற்றாது. ஆனால் நம்முடைய வார்த்தைகளில் பரிசுத்த ஆவியானவர் இருந்தால் அந்த வார்தைகள் அவர்களை மாற்றும். தேவனுடைய வார்த்தைகள் தான் மாற்றும் என்பதை மனதில் வையுங்கள். நம்முடைய வார்த்தைகளால் அவர்கள் அவர்களின் அக்கிரமத்தை விட்டு நீங்காமல், நாம் அவர்கள் மேல் கோபம் கொண்டு, கசப்பாக இருதயத்தில்உருவாகி, பின் வெறுப்பு ஏற்பட்டு நாம் பாவியாக மாறிவிட கூடாது.நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் இதை ஆராயவே இந்த வாழ்வு போதாதே.யாரும் சரி இல்லை என்று சொல்லும் முன் நாம் எப்படி உள்ளோம் என்று பார்ப்பது அவசியம்.நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயம் தீர்க்கப்படோம்..இன்றைக்கு நிற்கின்ற நான் நாளை விழ மாட்டேன் என்பது
எப்படி நிச்சயம்!?
ஜாக்கிரதை!!!!
Sis. Meena Juliet
Description: Devotional Tamil Message By Sis. Meena Juliet, A Book of David's Sins! - தாவீதின் பாவங்களின் புத்தகம்!.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Tamil Devotional Message.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Tamil Devotional Message.