Marathavar Kaividathavar - மறவாதவர் கைவிடாதவர்
மறவாதவர் கைவிடாதவர்
என்னை தம் உள்ளம் கையில் வரைந்து வைத்தவர்
உம் அன்பு ஒன்றே மாறாதையா
உம் அன்பொன்றே மறையாதையா
உம் அன்பில் மூழ்கனும்
உம் நிழலில் மறையனும் - 2
தீங்கு நாளில் என்னை கூடார மறைவில்
ஒளித்து என்னை பாதுகாத்து
கன்மலை மேல் நிறுத்தினீர் - 2
ஆனந்த பலிகளை செலுத்தி
கர்த்தரை நான் பாடிடுவேன் - 2
எனக்காய் யாவும் செய்து முடிக்கும்
அன்பை நான் துதித்திடுவேன் - 2
கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர்
என் நினைவும் என் வழியும்
உமக்கு மறைவாக இல்லையே
உம்முடைய ஆவிக்கு மறைவாய் எங்கே நான் போவேனோ
உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே நான் ஓடிடுவேன்
எங்கும் நிறைந்த ஏலோஹிம்
நீர் உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்
என் நினைவும் என் வழியும்
உமக்கு மறைவாக இல்லையே
உம்முடைய ஆவிக்கு மறைவாய் எங்கே நான் போவேனோ
உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே நான் ஓடிடுவேன்
எங்கும் நிறைந்த ஏலோஹிம்
நீர் உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்
Song Description: Tamil Christian Song Lyrics, Marathavar Kaividathavar, மறவாதவர் கைவிடாதவர்.
Keywords: David Vijayakanth, Jecinth David, Marathavar Kaividaathavar.