Enge Poven Naan - எங்கே போவேன் நான்
எங்கே போவேன் நான்
எந்தன் இயேசுவே !
யாரிடம் சொல்வேன் நான்
எந்தன் பாரத்தை
ஆற்றவும் தேற்றவும்
உம்மைப் போல யாருண்டு
அன்பு காட்டவும் அரவணைக்கவும்
உம்மைத் தவிர எவருண்டு
நீரே எந்தன் தஞ்சம்
தயவு காட்டுமே ! கிருபை தாருமே !
உந்தன் அன்பை உணராமல்
நாங்கள் செய்த தவறுகள்
எண்ணிலடங்காதே ! அதை
எழுத முடியாதே ! - 2
ஆனாலும் மன்னித்தீர் ! மன்னித்தீர் !
தயவாய் என்னை மன்னித்தீர் !
- ஆற்றவும்
எம் கண்கள் உம்மைத் தேடுதே !
கரங்கள் கூப்பி அழைக்குதே !
அன்பு தேவனே !
என் அருகில் வாருமே ! - 2
என்னையும் தேற்றுவீர் ! தேற்றுவீர் !
அன்பாய் என்னைத் தேற்றுவீர் !
- ஆற்றவும்
உந்தன் வார்த்தை இன்று தாருமே !
என் வழியை நீர் காட்டுமே !
எந்தன் இயேசுவே !
என் அன்பு நண்பனே ! - 2
நித்தமும் நடத்துவீர் ! நடத்துவீர் !
கனிவாய் என்னை நடத்துவீர் !
- ஆற்றவும்
என் வழியை நீர் காட்டுமே !
எந்தன் இயேசுவே !
என் அன்பு நண்பனே ! - 2
நித்தமும் நடத்துவீர் ! நடத்துவீர் !
கனிவாய் என்னை நடத்துவீர் !
- ஆற்றவும்
Songs Description: Tamil Christian Song Lyrics, Enge Poven Naan, எங்கே போவேன் நான்.
KeyWords: David Selvam, Berachah Media, Enge Povaen.