Thevathi Thevane - தேவாதி தேவனே
தேவாதி தேவனே மகத்துவா ஸ்தோத்திரம்
தேசிகர் போதனே ஜீவா ஸ்தோத்திரம் - 2
வந்தனம் தந்துமைச் சொந்தமாய்ப் போற்றுவேன்
இந்த வேளைதனில் வந்தருள் ஈகுவாய்
ஈனப் பாவியெந்தன் மீட்பா ஸ்தோத்திரம்
ஈனச் சிலுவையை எடுத்தாய் ஸ்தோத்திரம் - 2
- வந்தனம் தந்துமை
ஆலோசனை தரும் ஞானமே ஸ்தோத்திரம்
அல்லல்கள் தீர்த்திடும் வல்லவா ஸ்தோத்திரம் - 2
- வந்தனம் தந்துமை
மாலை மயங்கையில் ஜோதியே ஸ்தோத்திரம்
காலைச் சமயத்திலென் ஜீவனே ஸ்தோத்திரம் - 2
- வந்தனம் தந்துமை
அன்பர் விட்டோடினும் மாறிடா நண்பனே
கொண்டாயுன் இரத்தத்தால் கொற்றவா ஸ்தோத்திரம் - 2
- வந்தனம் தந்துமை
Songs Description: Christian Song lyrics, Thevathi Thevane, தேவாதி தேவனே.
KeyWords: Tamil Christian Song Lyrics, Devathi Devane, Devathi Devanae, Thevathi Thevanae, TPM Songs.