En Anbar Yesu - என் அன்பர் இயேசு
என் அன்பர் இயேசு
என்னை மீட்க பல பாடடைந்தார் - 2
என்ன பதில் செய்வேனோ
என்னை தந்தேனே அவர் சேவையில்
என் பிராணன் பலியாகட்டும்
அலைந்தே பகலெல்லாம் பல நன்மை செய்தார்
பொழுது இரவெல்லாம் நமக்காய் ஜெபித்தார் - 2
கண்ணுறங்கி சுபமோகமாய் இல்லை
உணவும் சமயமில்லாமல்
அவர் சேவை செய்தார்
- என் அன்பர் இயேசு
அவர் செய்தது போல ஊழியம் செய்வேன்
அன்றாடகம் எந்தன் சிலுவை சுமப்பேன் - 2
கர்த்தர் என் கரம் தாங்குவார் தளரேன்
கருத்தோடு அவர் வாக்கை நம்பி
கடும் சேவை செய்வேன்
- என் அன்பர் இயேசு
கர்த்தர் சித்தமேல்லாம் நடந்தேறும் என்னில்
கடைசிவரையாவும் நலமாய் முடியும் - 2
கிறிஸ்தேசு வரும் நாள்வரை இப்பூவில்
கனியான மரமாய் திகழ்ந்து
அவர் சேவை செய்வேன்
- என் அன்பர் இயேசு
Song Description: Tamil Christian Song Lyrics, En Anbar Yesu, என் அன்பர் இயேசு.
KeyWords: Saral navaroji lyrics, Sarah navaroji songs lyrics, Yen Anbar Yesu.