Unnathamanavare - உன்னதமானவரே



உன்னதமானவரே உறைவிடமானவரே
உமக்கே எங்கள் ஆராதனை - 2

கர்த்தாவே உம்மை தேடுவோர்க்கு
நன்மைகள் ஒன்றும் குறைவுபடாது - 2

முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால்
வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே - 2
                               - உன்னதமானவரே

1.சூழ்ந்து காக்கும் கேடகமே
தாங்கி நடத்தும் நங்கூரமே - 2
குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம்
கர்த்தாவே உம்மை சார்ந்து கொள்வோம் - 2
                               - உன்னதமானவரே

2.வாதைகள் எங்களை அணுகிடாது
பொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது-2
வழிகளிலெல்லாம் எங்களை காத்திட
பரலோக தூதர்கள் தந்தீரையா - 2
                               - உன்னதமானவரே


Songs Description: Unnathamanavare, உன்னதமானவரே.
KeyWords: Tamil Christian Song Lyrics, Reegan Gomez,  Aarathanai Aaruthal Geethangal.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.