நான் கலங்கினதை கண்டவரே
என் கண்ணீரெல்லாம் துடைத்தவரே
என் உள்ளம் உடைந்த போது
என்னை மார்போடு அணைத்து உருவாக்கினீர்
நான் நம்பிக்கை இழந்த போது
என்னை கரம் பிடித்து நடத்தி வந்தீர்
என் வாழ்வே நீர்தானையா
என் இயேசுவே என் தெய்வமே - 2
- நான் கலங்கினதை
உம் சிறகுகளின் நிழலை தந்தீர்
உம் தழும்புகளால் சுகத்தை தந்தீர் - 2
பனிபோல உருக்கினீர் மலை போன்ற துன்பம்
இத்தீங்கு நாட்களில் நீர்தான் என் தஞ்சம் - 2
- என் வாழ்வே
நீ போகும் இடமெல்லாம் உன்னோடு வருவேன்
என்றுரைத்த துணையாளரே - 2
மரண இருளின் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளையில் என்னோடு வந்தீர் - 2
- என் வாழ்வே
Song Description: Tamil Christian Song Lyrics, Naan Kalanginathai, நான் கலங்கினதை.
KeyWords: Nigel Solomon, Worship Song, Elroi Ministries, Nan Kalanginathai.