Enna Azhagu - என்ன அழகு
என்ன அழகு இயேசுவின் கண்கள்
அக்கினி மயமான அழகு கண்கள்
என்னை உற்று நோக்கி
ஆழம் அறியும் கண்கள்
என் பாவம் போக்கும் பரிசுத்த கண்கள்
என் ஜீவன் காக்கும் ஜீவ கண்கள்
என் பாதை நோக்கும் தேவ கண்கள்
என் அன்பரின் அழகு கண்கள்
- என்ன அழகு
பூமி எங்கும் உலாவும் கண்கள்
அதின் குடிகளை ஆராயும் கண்கள்
உறங்காது என்னை காக்கும் கண்கள்
என் இனியரின் இனிய கண்கள்
- என்ன அழகு
பாலினால் கழுவிய கண்கள்
நெற்றியாய் பதித்த ஒப்பற்ற கண்கள்
நதி ஓரம் தங்கும் புறா கண்கள்
என் ராஜாவின் ராஜ கண்கள்
- என்ன அழகு
நீதியை பேசிடும் கண்கள்
அனுதினம் என்னொடு உறவாடும் கண்கள்
என் உயிரோடு கலந்த கண்கள்
என் உயிரான இயேசுவின் கண்கள்
- என்ன அழகு
Song Description: Tamil Christian Song Lyrics, Enna Azhagu, என்ன அழகு.
KeyWords: Tamil Christian Song , Jenet Santhi, En Aasai Neerthanaiyaa, Enna Azhahu, Enna Alagu.