Ninaivellam - நினைவெல்லாம்
Scale: D Major - 2/4
நினைவெல்லாம்
ஏக்கமெல்லாம்
வாஞ்சையெல்லாம் நீரே
உம்மோடு நான் நடக்கனுமே
உம்மோடு நான் பழகனுமே
உந்தன் சித்தம் செய்யணுமே
என் அன்பே என் உயிரே
மழைக்காக காத்திருக்கும்
பயிர் போல நான் காத்திருந்தேன்
மேல் காற்று வீசுமென்று
ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்தேன்
மழையாக இறங்கணுமே
என்னை முழுதும் நனைக்கணுமே
- நினைவெல்லாம்
தநதை என்பேன் தகப்பன் என்பேன்
தனிமையிலே என் துணை என்பேன்
சிநேகிதரே சிறந்தவரே
மார்போடு என்னை அணைப்பவரே
மணவாட்டி என்றவரே
மணவாளன் இயேசுவே
- நினைவெல்லாம்
Song Description: Tamil Christian Song Lyrics, Ninaivellam, நினைவெல்லாம்.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Nenaivellam, Ninaivellaam, Nandri 5.