Ithuvarai Uthavina - இதுவரை உதவின
இதுவரை உதவின எபிநேசரே
இனிமேலும் நடத்தும் யெகோவாயீரே - 2
நன்றியுடன் பாடிடுவோம்
வாழ்நாளெல்லாம் போற்றிடுவோம் - 2
தலைமுறை தலைமுறையாய்
எங்கள் அடைக்கலமானீரைய்யா
முற்பிதாக்கள் ஆராதித்த
எங்கள் பரிசுத்த தெய்வம் நீரே
செங்கடல் இரண்டாய் பிளந்தவரே
கோட்டைகள் எல்லாம் உடைத்தவரே - 2
மேகமாக முன் சென்றீரே
அக்கினியாய் துணை நின்றீரே - 2
மாராவின் தண்ணீரை கடக்க செய்தீர்
மதுரமாம் நீரூற்றை தந்து விட்டீர் - 2
தாகமெல்லாம் தீர்த்தீரைய்யா
ஜீவத் தண்ணீர் தந்தீரைய்யா - 2
வாக்களித்த தேசம் சேர்த்திடுவீர்
வழுவாமல் என்றும் காத்திடுவீர் - 2
பற்றிக்கொள்வோம் உம்மை என்றும்
இயேசுவையே பின் போற்றுவோம் - 2
Songs Description: Christian Song Lyrics, Ithuvarai Uthavina, இதுவரை உதவின.
KeyWords: Tamil Christian Song Lyrics, Reegan Gomez, Aarathanai Aaruthal Geethangal, Idhuvarai Udhavina, Ithu Varai Uthavina.