Ellaam Koodume - எல்லாம் கூடுமே
Scale: F Minor - 4/4
எல்லாம் கூடுமே
எல்லாம் கூடுமே
ஒரேயொரு வார்த்தை
சொன்னால் போதும்
எல்லாம் கூடுமே – 2
மழை வந்தாலும் பயமில்லையே
அலை வந்தாலும் பயமில்லையே
புயலடித்தாலும் பயமில்லையே
பயமில்லை பயமில்லை
பயமில்லையே
- எல்லாம்
தண்ணீர் ரசமாய் மாறிற்றே
கசப்பும் இனிப்பாய் மாறிற்றே
மாரா போன்ற அனுபவம் எல்லாம்
மதுரமாய் மாறிற்றே
அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் குறைவுகள் நீங்கிற்றே
நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் வாழ்க்கை மாறிற்றே
- எல்லாம்
தேவைகள் எல்லாம் தீர்ந்ததே என்
பாரங்கள் எல்லாம் போனதே
என் பண்டகசாலையில்
ஒவ்வொருநாளும் மீனாய் நிரம்பியதே
அடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் சூழ்நிலை மாறினது
நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
என் ஊழியம் மாறினது
- எல்லாம்
Song Description: Tamil Christian Song Lyrics, Ellaam Koodume, எல்லாம் கூடுமே.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Ellam Koodumae, Ellaam Koodumae, Nandri 6.